புதுவை ஆளுநர் மாளிகையில் வடமாநில ஊழியர்கள் மட்டும் பணி நிரந்தரமாம்?

 இளைஞர்கள் கொந்தளிப்பாம்!

புதுச்சேரி, பிப். 21- புதுச்சேரி மாளிகையில் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் என மொத்தம் 17 பேர் வேலை பார்க்கின்றனர். இதில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்கள் அதிகம்,

கிரண் பேடி புதுச்சேரி ஆளுநர் ஆனதும் தனக்கு உதவியாக மூன்று இந்திக்காரர்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்து வேலைக்கு வைத்தார்.

 தற்போது அவர் பதவிக்காலம் முடிந்து விட்டது, தனது பதவிக் காலம் முடியும் கடைசி நிமிடத்தில் தான் டில்லியில் இருந்து அழைத்து வந்த 3 இந்திகாரர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்யும் ஆணையில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர்களை நிரந்தர அரசுப் பணியாளர் ஆக்கிவிட்டார். இந்த நிலையில் பல ஆண்டு களாக அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் தமிழர் களின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் அவர்களது ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க முடியாமல் தமிழர்களை வீட்டிற்கு அனுப்பும் விதமாக ஆளுநர் மாளிகை புதியநபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது என்று ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். கிரண் பேடி வட இந்தியர் ஆகை யால் அவர் தமிழர்களைப் பழிவாங்கும் நினைப்போடு இதைச் செய்துள்ளார். ஆனால் தற்போது தமிழிசை அங்கு அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் வடகலை தென்கலை பிரச்சினையால் நின்று போன பிரபந்தம் பாடல்

காஞ்சிபுரம், பிப். 21- காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலில்  கரோனா வைரஸ் காரணமாக  10 மாதங்கள் கழித்து,   19.2.2021 அன்று  மாசிமக உற்சவம் நடைபெற்றது. அதில் சூரிய பிரபை என்னும் கோலத்தில் பெருமாளை  வீதி உலா கொண்டு வருவதும், பெரு மாளுக்கு முன் பிரபந்தங்கள் பாடிக்கொண்டு செல்வதும் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால்,  வடகலை - தென்கலை  பிரச்சினையின் காரணமாக இவ் வாண்டு பிரபந்தம் பாடும் வழக்கம் நடைபெறவில்லையாம்.

சமஸ்கிருத மொழியில் பாடினாலும் தமிழ் மொழியில் பாடினா லும் பெருமாள் என்னும் பொம்மை எதையும் கேட்கப்போவதில்லை.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, பிப். 21- தமிழகத்தில் அய்ந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத் தூர், இராணிப்பேட்டை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும் மோடியால்

போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை

பிரியங்கா காந்தி சாடல்

லக்னோ, பிப். 21- உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் மத்திய அரசை விமர்சித்து பேசினார். விவசாயிகளிடையே பேசிய அவர், "டில்லிக்கு அருகில் 90 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 215 விவசாயிகள் இறந்தனர். அவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் நிறுத்தப் பட்டது. அவர்கள் மத்திய அரசால் தாக்கப்பட்டனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் தாக்குதலின் போதும் அவர்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், டில்லியின் எல்லைகள் பன்னாட்டு எல்லைகளாக மாற்றப்பட்டன. தொடர்ந்து விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியால் டில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

கடவுளின் பெயரால் அரசியல் செய்யும் பா... சித்தராமையா சாடல்

பெங்களூரு, பிப். 21- கடவுளின் பெயரால் மக்களின் உணர்ச்சி களைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்வதாக கரு நாடக முன்னாள் முதல்வர் கருநாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (20.2.2021) செய்தியாளர்களை சந்தித்த கருநாடக மாநில முன்னாள் முதல் வரும், காங்கிரஸ் கட்சித் தலைவரு மான சித்தராமையா ராமன் கோயில் கட்டு மானத்தை பாஜக தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "கடவுளின் பெயரில் மக்களின் உணர்ச்சி களைக் கொண்டு பாஜக விளையாடுகிறது. ராமன் கோயில் கட்டு வதற்காக சேகரிக்கப்பட்ட நன்கொடைகளின் கணக்குகளை வழங்கு வது அறக்கட்டளையின் கடமையாகும். தணிக்கை மற்றும் கணக்கு களைக் கேட்பதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்,

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் எங்கள் கிராமத்தில் ஒரு ராமன் கோயிலை கட்டி வருகிறோம். எங்களுக்கும் கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் நம்பிக்கைகள் என்பது எங்களின் தனிப்பட்ட பிரச்சினை. அதனை ஒரு அரசியல் கருவியாக பயன் படுத்தக்கூடாது. பாஜக தலைவர்கள் ராமன் கோயில் கட்டுவதை தங்கள் அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவது கெட்ட வாய்ப் பானது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ராமன் கோயில் கட்ட நிதி வழங்குமாறு மக்கள் மிரட்டப்படுவதாக கருநாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Comments