பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணியா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணியா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, ஜன. 24- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

வரும் ஜூலை 1 முதல் பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலை உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின்உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்து இருக்கிறது. தமிழக அரசின் இந்த அரசாணை அநீதியாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன, பழங்குடி இன மாணவர்கள் உயர்கல்வித் துறைக்கு பணி வாய்ப்புப் பெற்று வந்துவிடக்கூடாது என்ற வன்மம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சனாதனக் கூட்டத் தின் குறிக்கோள்களை தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது பாஜ அரசு. அதையே காரணம் காட்டி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்து உள்ளது.சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மதச்சார்பின்மையை கேலிக்கூத்தாக்குவதா?

அரசு அலுவலகத்தில் கணபதி பூஜையா?

சென்னை, ஜன. 24- நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் வரும் 27இல் கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது.

அண்ணா சாலையில் செங்கல்வராய நாயக்கர் அறக்கட்ட ளைக்கு சொந்தமான கட்டடத்தில் டிடிசிபி எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் தற்போதுள்ள இந்த டிடிசிபி அலுவலகத்தை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத் துக்கு சொந்தமான கட்டடத்தில் வரும் 27ஆம் தேதி முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இடம் மாற்றம் செய்யப்படுவதை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை மகா கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் சிற்றுண்டி ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் தவறாறு கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. அதன்பின்னர் வழக்கம் போல் தற்போது உள்ள கட்டடத்தில் அலுவலக பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்து இருப்பதும், அதில் ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு சுற்றறிக்கையாக அனுப்பி இருப்பதும், ஊழியர்கள் மத்தியில் அரசே மதசார்பின் மையைக் கேலிக்கூத்தாக்குவதா என்று  கொதிநிலை ஏற்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்

சென்னை, ஜன. 24- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை யில் விரைவில் நல்ல தீர்வு வரும் என்று துணை முதல்வர் .பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்வர் .பன்னீர்செல்வம் நேற்று (23.1.2021) வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சர வையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் அதிமுக அரசுதான். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment