தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஏற்காமல் தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஏற்காமல் தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திருப்பூர், ஜன. 24- ‘‘ஒரே மொழி, ஒரே நாடு என்ற கலாச்சாரத்தை திணிப் பதன் மூலம் தமிழக மக்களை இரண் டாம்தர குடிமக்களாக கருதுகிறார் மோடி’’ என்று கோவையில் பிரச் சாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். மேலும், ‘‘தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதை போல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்க நினைப்பது நடக்காது’’ என் றும் எச்சரித்தார்.

கோவை பீளமேடு விமான நிலை யம் அருகே அவினாசி ரோடு-சிட்ரா சந்திப்பில், திறந்த காரில் நின்றபடி ராகுல்காந்தி நேற்று (23.1.2021) பேசியதாவது:- இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களுடைய உரிமையை மோடி பறிக்கிறார். விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகளை மாபெரும் தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார். அதனால்தான் நாங்கள் பா...வை எதிர்க்கிறோம், விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். இந்தியாவுக்கு சிறந்த தொழில் அமைப்புகள் தேவைப்படு கின்றன. வேலைவாய்ப்பு தேவைப்படு கிறது. தமிழக மக்களிடமிருந்து கற் றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தமிழக இளைஞர்கள் கெட்ட வாய்ப்பாக வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். அதேபோல், தமிழக விவசாயிகளும் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றி, புதிய அரசு அமைக்க, உங்க ளுக்காக செயல்படுகிறோம். நீங்கள் விரும்பக்கூடிய அரசாங்கத்தை தரு வதுதான் எங்களது நோக்கம்.  இவ் வாறு ராகுல்காந்தி பேசினார்.

திருப்புரில்...

அதன்பின், நேற்று மாலை திருப் பூர் அனுப்பர்பாளையம் புதூரில் திறந்த வேனில் நின்றபடி ராகுல்காந்தி பேசியதாவது: இந்தியாவின் நிலை மையை அனைவரும் அறிவோம். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கரோனாவை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. இன்றைய இளை ஞர்களுக்கு இந்தியாவின் சூழ்நிலை நன்றாக தெரியும், பொருளாதாரம் என்பது உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், அது  இந்தியாவில் அழிந்து வருகிறது. நாட்டை ஆள்ப வர்கள் இந்தியாவின் நிலைமையை அறிய தயாராக இல்லை.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்டுவர பிரதமர் மோடி போராடி வருகிறார். அது என்னவென்றால், ஒரே மொழி, ஒரே நாடு என்ற கலாச்சாரம். பிரதமர் மோடி, தமிழ்மொழி, கலாச்சாரத்தை ஏற்காமல் தமிழக மக்களை இரண் டாம்தர குடிமக்களாக கருதுகிறார். தமிழ் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றி அவர் அறியவில்லை. நம் கலாச்சாரம் அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது. இதுதான் தமிழகத்தின் கலாச்சாரம், அடை யாளம் ஆகும். ஆனால், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை பிரதமர் முன் னிறுத்த முயல்கிறார். சுய மரியா தையை சார்ந்து இருப்பவர்கள் தமி ழர்கள். தமிழக அரசை கைக்குள் வைத்திருப்பதைபோல, தமிழக மக்களையும் கைக்குள் வைக்கலாம் என நினைக்கிறார்கள். பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாம் போராடி வருகிறோம்.

உங்கள் கலாச்சாரத்தை, நாகரி கத்தை காப்பாற்றுவது எனது கடமை. வரும் தேர்தலில் புதிய அரசு அமை யும். எளிய, மக்கள் ஏழை மக்களுக்கான அரசாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment