பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள்

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

விழுப்புரம், ஜன. 24- பெரியார் பன் னாட்டு அமைப்பு சார்பில் எழுச் சித்தமிழர் தொல். திருமாவளவனுக்கு சமூக நீதிக்கான கி. வீரமணி விருது வழங்கப்பட்டது.

இவ்விருது பெற்ற தொல்.திருமா வளவனுக்கு விழுப்புரத்தில்  பாராட்டு விழா திருவள்ளுவர் கல்வி இயக்கத் தின் தலைவர் பாலு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

எனக்கு இந்த விருதை வழங்கி யதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரித்தது பெருமையாக உள்ளது. இது 30 ஆண்டுகள் உழைப் புக்கு கிடைத்த அங்கீகாரம். திருமா வளவனை யாரும் தனிமைப்படுத் தவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஓரங்கட்டவோ முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பை உண் டாக்க என்னை குறிவைத்து அப்பட் டமான அவ தூறுகளை அள்ளி வீசுகிறார்கள். அடுத்து நாங்கள்தான் முதல்வர் என தம்பட்டம் அடிக்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. மேலும், எந்த ஜாதிக்கும் எதிரான கட்சியும் அல்ல. சமூக நீதியை அழிக்க, பெரியாரின் அடையாளத்தை சிதைக்க முயற்சிக் கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். அவர்கள் தங்கள் ஜாதிக்கும், நம்பும் ஜாதிக்கும் எதிராக உள்ளனர். பாஜக முதலில் காவு வாங்கப்போவது அதிமுகவைத்தான். திமுக - பாஜக என்ற நிலையை உரு வாக்க முயல்கின்றனர். தமிழ் சமூகத் திற்கு அதிமுக மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

Comments