குடியரசு நாளில் விவசாயிகள்மீது தாக்குதலா? தமிழர் தலைவர் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 27, 2021

குடியரசு நாளில் விவசாயிகள்மீது தாக்குதலா? தமிழர் தலைவர் கண்டனம்

இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக  அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக   தாக் கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதுஅமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா?

அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாய மான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும்!

குடியரசு  நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும்.

விவசாயிகளின் வயிற்றில் அடித் தது போதாதா? இப்பொழுது விவ சாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா?

அமைதியான சூழலை அரசே வன் முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

27.1.2021  


No comments:

Post a Comment