எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம். 2016 இல் 65,590 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் ஆண்கள் 28,971, பெண்கள் 36,619. இதில் மார்பகப் புற்றுநோய் 24 புள்ளி 7 விழுக்காடு; கருப்பைப் புற்று 19 புள்ளி 4 விழுக்காடு. நிகழாண்டில் 78 ஆயிரத்தைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 11 பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

- அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் அறிக்கையிலிருந்து...

தடுப்பான்கள்

உணவில் பூண்டு, வெங்காயம், கேரட், முட்டைகோஸ், காலிஃபிளவர், தக்காளி, புதினா, மஞ்சள், கருஞ்சீரகம், மிளகு, வெந்தயம், இஞ்சி, கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் புற்றுநோய்க்குப் பரம எதிரி. பூண்டு, வெங்காயம் இவற்றில் உள்ள அலிசின் புற்றுநோய் செல்களை எரித்துவிடும்.

Comments