செய்தியும், சிந்தனையும்....!

பாவ' தொழில்!

டில்லி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை: - மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு.

ஆக, திட்டவட்டமாக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைப் பின்வாங்கப் போவதில்லை என்பதுதான் மத்திய பா... அரசின் முடிவு. இதற்குத்தான் 11 தடவைப் பேச்சுவார்த்தையா?

கார்ப்பரேட்டுகள் தான் இந்த ஆட்சிக்கு முக்கியமே தவிர, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் முக்கியமல்ல - மனுதர்மப்படி விவசாயம் பாவத் தொழில் ஆயிற்றே - மதவாத ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்.

()றக்கம் இல்லாதது ஏன்?!

ஏழு பேர் விடுதலையில் நீதிமன்றத்தின் முடிவை காங்கிரஸ் ஏற்கும்: - மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் .வெ.கி..இளங்கோவன் கருத்து

உச்சநீதிமன்றம், தமிழக அரசு, கட்சித் தலைவர்கள் சொன்ன பிறகும் மத்திய அரசுக்கு - ஆளுநருக்கு என்ன தயக்கமோ?

குஜராத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட வழக்கில் இரு ஆயுள் தண்டனை பெற்ற பா... அமைச்சர் மாயாகோட் வானியின் தண்டனையை ரத்து செய்யும் பா... ஆட்சிக்கு இதில் மட்டும் மன ()றக்கம் இல்லாதது ஏனோ?

இளைஞர்களுக்கு

வழி விடவேண்டும்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், தோல்விக்குப் பின் மீண்ட இந்திய அணியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்!

ஆமாம், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும், அப்படித்தானே!

சட்டம் ஒழுங்குவெகுஜோர்!'

ஓசூரில் பட்டப் பகலில் தனியார் நிறுவனத்தில் துப்பாக்கியைக் காட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை.

இப்பொழுதெல்லாம் ஊடகங்களுக்குப் போனால் கொலை, கொள்ளை வழிபாடு, பாலியல் வன்கொடுமை இவைதான்! நாட்டில் சட்டம்- ஒழுங்குவெகு ஜோர்!'

காற்றில் பறக்குமோ!

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: - .தி.மு.. அறிவுறுத்தல்

அப்பொழுது மட்டும் கரோனா தொற்று பாதுகாப்பு என்பதெல்லாம் காற்றில் பறந்துவிடுமோ!

(குறிப்பு: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர்கள்மீது நடவடிக்கை - தமிழக அரசு உத்தரவு).

உயர்கிறதா இல்லையா?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு.

ஏதாவது உயர்கிறதா - இல்லையா? என்று மத்திய பா... அரசு மார்தட்டிக் கொள்ளலாம் அல்லவா!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரியாதோ!

தமிழக வீரர் சின்னப்பம்பட்டி நடராஜன் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் புகழாரம்.

ஆஸ்திரேலிய வீரருக்குத் தெரிந்த உண்மை - இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரியாதோ!

Comments