விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது

சோனியா காந்தி தாக்கு

புதுடில்லி,ஜன.23- வேளாண் சட் டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் உணர் வற்றும், ஆணவப்போக்குடனும் நடந்துகொள்ளும் மத்திய அர சைப் பார்த்து அதிர்ச்சியாக இருக் கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று (22.1.2021) நடைபெற்றது. காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி இந்தக் கூட் டத்தில் பேசியதாவது:

''வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 50 நாட் களுக்கும் மேலாகப் போராடி வரு கிறார்கள். ஆனால், போராட்டம் குறித்து எந்தவிதமான உணர்ச் சியும் இல்லாமல் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் மத்திய அர சின் செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இதன் மூலம் வேளாண் சட் டங்கள் வெறுப்புடன் தயாரிக்கப் பட்டுள்ளது தெளிவாகத் தெரி கிறது. அதனால்தான் நாடாளு மன்றத்தில் இந்த மசோதா குறித்து விவாதிக்கவும், அதன் தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கவும், பேசவும், உள் நோக்கத்துடன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

வேளாண் சட்டங்கள் குறித் துத் தொடக்கத்தில் இருந்தே காங் கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும், குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல், ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும் என்பதால், நாம் தொடக்கத்தில் இருந்தே புறக்கணித்தோம்.

நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் ஏராளமாக விவாதிக்க வேண்டிய அம்சங்கள் இருக் கின்றன. பேசவேண்டிய விஷ யங்கள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு அந்த விவகாரங் களை விவாதிக்கவிடுமா, அனு மதியளிக்குமா என்பதுதான் பிரச்சினை.

வாட்ஸ் அப்பில் அர்னாப் கோஸ்வாமிக்கும், டிஆர்பி நிறு வனத்துக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் .கே.அந்தோணி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நாட்டின் தேசப் பாதுகாப்பு எவ்வாறெல் லாம் சமரசம் செய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இந்த விவகாரம் வெளியான பின்பும், மத்திய அரசு தனக்கு ஏதும் தெரியாததுபோல் அமைதி யாக இருந்து வருகிறது. மற்றவர் களின் நாட்டுப் பற்றுக்கும், தேசிய வாதத்துக்கும் சான்று அளித்தவர் கள் தற்போது பதில் கூற முடி யாமல் நிற்கிறார்கள். அவர்கள் முழுமையாக தாங்கள் யாரென்று வெளிப்பட்டுவிட்டார்கள்.

கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். முழுமையாக முடிக் கப்பட வேண்டும். இந்தக் கரோனா காலத்தில் ஏராளமான மக்கள் வெளியே தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர் களின் காயம், ரணங்கள் ஆறு வதற்கு நீண்டகாலம் ஆகும்.

நாட்டின் பொருளாதாரச் சூழல் பெரும்பாலான இடங்களில் பாதிப்புடனே இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் களில் பாதிப்பு இன்னும் குறைய வில்லை. அமைப்பு சாரா தொழில் களுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.''

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

Comments