பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்புடையவர்களை விலக்கி வைக்கும் ஜோ பைடன் நிர்வாகம்

வாசிங்டன் டிசி, ஜன.23 ஹிந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்புகளோடு  தொடர்பில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை ஜோ பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும். ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது

ஜோ பைடன் நிர்வாகத்தில் பணிபுரிய இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முன்பு பரிந்துரைத் திருந்த பட்டியலுடன் ஒப்பிடும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட்டுள்ளன.

பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக இவர்களை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பரப்புரையின்போது அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றாக ஜோ பைட னுக்கு கடிதம் அனுப்பினர். அதில், ‘‘இந்தியாவில் தீவிர வலதுசாரி ஹிந்து அமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர். பைடன் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் அளிக் கக்கூடாது'' என்று கூறப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டி ருந்தன. இருவரும் ஹிந்து மதவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள் என்றும், ஹிந்து ஆதிக்கத்திற்கு ஆதரவாகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

‘‘அமெரிக்காவில் அவர்கள் இனவெறியை எதிர்த் துப் போராடுவதைப் போலவும், பன்முக கலாச் சாரத்தை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள் கின்றனர். ஆனால், இந்தியாவில் தங்களது சொந்த இனவெறியை நிலைநிறுத்துகிறார்கள். எனவே, உங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஹிந்து மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கத்தை ஆதரிக்கும் நபரும் உங்கள் நிர்வா கத்தில் இருக்கக் கூடாது'' என்று பைடனுக்கு இந்திய அமைப்புகள் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்தே அவர்களின் நியமன ஆணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சோனல் ஷா

சோனல் ஷா, ஜோ பைடனின் ஒற்றுமை குழுவில் பணியாற்றியவர். அவரது தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ஏகல் வித்யாலயாவை தோற்றுவித்தவர். மேலும், பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவின் தலைவராகவும் அவர் இருந்தார்.

அமித் ஜானி

இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் பைடனின்முஸ்லீம் அவுட்ரீச்' பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பா ளராக அமித் ஜானி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டு உள்ளார்.

இருவருமே ஒபாமா நிர்வாகத்தில் கடைசி காலத்தில்  பணியாற்றி பின்னர் டிரம்ப் முகாமிற்கு தாவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனை அதிபராக தேர்ந்தெடுத்ததை அங்கீகாரம் செய்யும் தேர்தல் தலைமை (எலக்டோரல்) குழுவின் கூட்டம் நடந்துகொண்டு இருக்கும் போது கேபிடோல் மாளிகையில் (அமெரிக்க நாடாளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்திய தேசியக் கொடியுடன் கலந்துகொண்டனர்.

அதில் பிடிபட்ட ஒருவர் கூறும் போது, ‘‘இந்திய - அமெரிக்க அமைப்பு ஒன்றுடன் நாங்கள் இணைந் துள்ளோம். இந்த அமைப்பு போராடுவதற்குச் செல்லு மாறு எங்களை அழைத்தது'' என்று கூறியிருந்தார். ஏற்கெனவே ஹிந்து அமெரிக்க பவுண்டேசன் என்னும் அமைப்பு ஹவுடி மோடி நிகழ்ச்சிக்காக பல கோடிகளைச் செலவு செய்தது, இந்த நிகழ்ச்சியில் தான் அடுத்த முறையும் டிரம்ப் ஆட்சிக்கு வர ஒவ்வொரு அமெரிக்க வாழ் இந்தியர்களும் பாடுபடவேண்டும் மீண்டும் டிரம்ப் ஆட்சி மலரவேண்டும்(அப் கி பார் டிரம்ப் சர்கார்) என்று மோடி கூறியிருந்தார்.

 எங்கு அதிகாரம் இருக்கிறதோ அங்கு தாவும் குணத்தைக் கொண்ட ஹிந்துத்துவ அமைப்பினர் தற்போது ஜோ பைடன் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்ததும் ஜோ பைடன் கூடாரத்திற்கு தாவ முடி வெடுத்துள்ளனர். ஆனால், இதை ஜோ பைடன் ஆரம்பத்திலேயே கண்டுகொண்டார் என்று ஜோ பைடனுக்குக் கடிதம்மூலம் சமத்துவ சமூக நல்லிணக்க அமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

Comments