காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை வரவேற்கும் வளைகுடா நாடுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை வரவேற்கும் வளைகுடா நாடுகள்!

பெண்களுக்கு அதிக உரிமைகள் கொண்ட சீர்திருத்தங்கள் அறிமுகம்

இஸ்லாமிய கடும் சட்டங்களில் இருந்து நாட்டை நகர்த்தும் விதத்தில் அமீரகம் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 7) அன்று தனிநபர் சுதந்திரம் தொடர்பான சட்டங்களில் சீர் திருத்தங் களை அறிவித்தது. அரசு நடத்து 'எமி ரேட்ஸ்' செய்தி ஏஜென்சி (கீகிவி) மற்றும் 'தி நேசனல்' செய்திகளின் படி, ஆணவக் கொலைகள், மது கட்டுப்பாடு, திருமணம் ஆகாதோர்கள் சேர்ந்து இருத்தல், விவா கரத்து மற்றும் வாரிசு உரிமை தொடர்பான விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

எக்ஸ்போ 2020  கண்காட்சி நிகழ்வுக்கு முன்பு இது அறிவிக்கப்பட்டது. துபாயில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய கண் காட்சி இதுவாகும். பல்வேறு நாடுகளிலி ருந்து சுமார் 2.5 கோடி நபர்கள் இந்த கண் காட்சிக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்து 2021 ஏப்ரல் வரையில் நடைபெறும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில் கரோனா தொற்றின் காரணமாக இவை அடுத்த ஆண்டு அக் டோபரில் துவங்கி மார்ச் 2022 வரை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடு செயல்படுத்த இருக்கும் சீர் திருத்தங்கள் என்னென்ன?

மத வேதங்களை மீறுதல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுதல் போன்ற ஆணவ குற்றங்கள் என்ற பெயரில் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகப் பெண்களைத் தாக்கும் ஆண்களுக்குக் குறைவான தண்டனைகளே தரப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து வகையான வன்முறைகளும் ஒரே மாதிரியாகப் பார்க் கப்படும் என்று தி நேசனல் அறி வித்துள்ளது. பெண்களைப் பின்தொடருதல் மற்றும் வீதிகளில் துன்புறுத்துதல் போன்ற பெண் களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் கடுமையான தண் டனைகள் வழங்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பின் தொடர்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்கள் குற்றவாளியாக அறி விக்கப்படுவார்கள் என்ற சட்டத்தை மீண்டும் உறுதி செய்தது. சிறார்கள் அல்லது குறை மன திறன் கொண்ட ஒருவர் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

மது நுகர்வு

21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது குற்றம் அல்ல என்று அறி விக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் உரிமம் இல்லாமல் மதுபானங் களை வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி. செய்தியின் படி, இதுவரை உரிமம் பெற இஸ்லாமி யர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தாலும், மது பானங்களைக் குடிக்க அனுமதிக்கப்படு வார்கள்.  இதற்கு முன்பாக வளைகுடா நாட்டில் மது தொடர்பான வழக்குகள் மிகவும் குறைவானவை. உரிமம் இல்லாமல் குடிப்பவர்கள் மீது, தனிப்பட்ட வழக்கில் கைது ஆகும் போது கட்டணம் விதிக்கப் படும். சீர்திருத்தங்களில் இது மாற்றம் செய் யப்பட்டுள்ளது. இருப்பினும், 21 வயதிற்குக் குறைவானவர்கள் குடிப்பது தண்டனைக் குரிய செயலாகும்.

திருமணமாகாதவர்கள் சேர்ந்து வாழ்தல்

திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ் வது சட்டப்படி செல்லும் என்று முதன் முறையாக அறிவித்துள்ளது அமீரகம். இதற்கு முன்பு திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ்தல் சட்டப்படி குற்றமாகும். மேலும் முற்றிலும் தொடர்பே இல்லாத வர்கள் சேர்ந்து ஒரு வீட்டினை பகிர்ந்து கொள்ளுதலும் குற்றமாக இருந்தது. இது தொடர்பான வழக்குகள் அரிதாகவே இருக்கின்றன. இருப்பினும், நிறைய நபர் கள் இந்நாட்டிற்குக் குடியேற இது வழி வகுக்கிறது.

விவாகரத்து மற்றும் சொத்துரிமை

மிகப்பெரிய மாற்றமாக, வேறொரு நாட்டில் திருமணமானவர்கள், அமீரகத்தில் பிரிய விரும்பினால் அந்நாட்டின் சட்டப்படி விவாகரத்து வழங்கப்படும். சொத்து வழக் கில், உள்ளூர் நீதிமன்றங்களில் ஷரியா சட்டப்படி குடும்ப உறுப்பினர்களுக்குச் சொத்துகள் பிரித்துத் தரப்படும். தற்போது, ஒரு நபரின் குடியுரிமை எவ்வளவு சொத் தினை பிரிக்க வேண்டும் என்பதைத் தீர் மானிக்கிறது. (குறிப்பாக எழுத்துப்பூர்வ விருப்பம் இல்லாவிடில்) ஆனால் அமீரகத் தில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கு ஷரியா சட்டத்தின் படி முடிவுகள் மேற்கொள்ளப் படும்.

தற்கொலை மற்றும் முதலுதவி

தற்கொலை அல்லது தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ளுதல் குற்றம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்பு தற் கொலையிலிருந்து மீண்டவர்கள் கூட கைது செய்யப்பட்டனர். தற்போது காவல் துறை மற்றும் நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கான மனநல உதவியை வழங்கக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்கொலை செய்து கொள்ள ஒரு நபருக்கு உதவுவது சட்டப்படி குற்றமாகும். மேலும் குறிப் பிடப்படாத சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படும்.  அதே போன்று, ஆபத்து சூழலில் ஒருவருக்கு உதவி செய்து பின்பு அவருக்குக் காயம் அல்லது மரணம் ஏற் பட்டால் உதவி செய்த நபர் கைது செய் யப்படுவார். ஆனால் தற்போது உதவி செய்த நபருக்குத் தண்டனை ஏதும் இல்லை.

நடைமுறை சீர்திருத்தங்கள்

அரபு மொழி தெரியாத பிரதிகள் மற்றும் சாட்சிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளர்களை வழங்க நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியுரிமைச் சட்டங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அநாகரீகமான செயல்கள் தொடர்பான ஆதாரங்கள் இப்போது பாதுகாக்கப்பட வேண்டும், பகிரங்கமாக வெளியிட முடியாது என்று 'தி நேஷனல்' தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment