புகையிலையை விட ஆபத்தானது கஞ்சா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

புகையிலையை விட ஆபத்தானது கஞ்சா

கஞ்சா புகைப்பவர்களின் இதயத்துடிப்பு பொதுவாக சிகரெட் புகைப்பவர்களின் இதயத்துடிப்பை விட அதிகமாகும். இதனால் இதய நோய் ஏற்படப் பல மடங்கு ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர்.  கஞ்சா நமது இதய தசைகளுக்கு மிகவும் கடுமையான அழற்சியைத் தரும் இதனால் இதய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கஞ்சா எப்படி இதயத்தைப் பாதிக்கிறது?? கஞ்சாவில் கன்னாபிஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. 

 டெட்ராஹைட்ரோகனாபினால் என்ற மருத்துவப் பெயர்கொண்ட இந்த பொருள் புகைக்கும் போது மயக்கம் மற்றும் தன்நிலை மறக்கும் விளைவை ஏற்படுத்துகிறது. அதிக அளவு கஞ்சா புகைக்கும் போது அதன் போதையைத் தரும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆய்வில் இத யம் அதிக அளவு துடிக்கிறது, இதன் மூலம் மூன்று விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.  கஞ்சா போதையானது நமது ரத்த நாளங்களையும் அதன் உட்பகுதி சுவரையும் பாதிக்கிறது.  

அதே போல் நுணுக்கமான சில உடல் உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் போது அந்த உறுப்புகள் பாதிப்படைகின்றது.   ரத்த நாளங் களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடைசெய் யும் நிலைக்கு ஆங்கிலத்தில் வசோஸ்பாசம்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த நிலையில் தமனி மற்றும் சிரை போன்ற ரத்த நாளங்கள் ரத்த ஓட்டத்தைச் சரியாகக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

கஞ்சா புகைப்பது குறித்த ஆய்வை செய்த அல்பாமா பல்கலைக்கழக இதயவியல் மருத்துவர் நவ பஜாஜ் கூறும் போது, கஞ்சா புகைக்கும் போது இதய பாதிப்பு மட்டுமல்ல இது வேறு விதத்திலும் பாதிப்பை உருவாக்கு கிறது.  கஞ்சா புகை உடலில் சென்று பல வேதிப் பொருளாக மாற்றம் அடைக்கிறது. இந்த வேதிப் பொருட்கள் அனைத்துமே ரத் தத்தை அசுத்தப் படுத்தும் தன்மை உடையது, இதனால் இதயத்திற்கு வேலைப்பளு அதிக மாகிறது என்று கூறுகிறார். கஞ்சா புகைக்கும் போது சிகரெட் புகைப் பதை விட அதிக அளவு ஆழமாகக் கஞ்சா புகையை உள்ளிழுக்கின்றனர். 

அதே போல் சிறிது அதிகமான நேரம் புகையை நுரையீர லுக்குள் வைத்திருக்கின்றனர். இதனால் நுரை யீரலில் உள்ள நுணுக்கமான அறைகளின் சுவர்கள் அரிக்கப்பட்டு புற்றுநோயாக உரு வாகும் ஆபத்து உள்ளது.  என்று அமெரிக்க நுரையீரல் கழகம் எச்சரிக்கின்றது.

No comments:

Post a Comment