மகிழ்வாக இருப்பதால் ஏற்படும் பலன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

மகிழ்வாக இருப்பதால் ஏற்படும் பலன்



இரத்தத்தில்   சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா? 

இந்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்  சிறு நீரகத்தின் மேல்பகுதியில்  சுரக்கப்படும் கார்டிசோல் சுரப்பிகள்  இரண்டாம் வகை நீரிழிவு நோயைக்  கட்டுப்படுத்தும்  என்று கண்டறியப்பட்டுள்ளது. கார்டிசோல் இரத்தத்தில் உருவாகும் கணையநீர் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டு  திசுக்கள் குளுக்கோசு உபயோ கிப்பதைக் குறைத்து உதிரத்தில் சர்க்கரை அளவை மட்டுப்படுத்துகிறது என்று ஆய் வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இதன் மூலம் மன அழுத்தமும் குணமடை கிறது. 

இது தொடர்பாக  Psychoneuro endocri nology என்ற மருத்துவ ஆய்வு இதழில் வெளிவந்த கட்டுரையில் கார்டிசோல் சுரப்பி உடலின் மாறுபட்ட சூழ்நிலையிலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தி சரிவிகிதமாக ஆற்றலை அனைத்து சொல்களுக்கும் கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது. நல்ல உடல்நிலையில் உள்ளவர்களுக்கு கார்டிசோல் இயற்கையிலேயே சரிவிகிதத் தில் சுரந்து காலை, மாலை, இரவு என அனைத்து கால நிலையிலும் இரத்தத்தில்    தேவையான சர்க்கரை அளவை கட்டுப் படுத்தி வழங்குவதற்குப் பெரிதும் உதவுகிறது. 

இது குறித்து ஒகியோ மாகாண வெக்ஸ்னர் மருத்துவமனையின் நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர் பான ஆய்வகத்தில் பணி புரியும் நிண நீர்சுரப்பித்துறை  மருத்துவர் ஜேசுவா ஜே ஜோசப் கூறும் போது, மனித உடலில் இரவு மற்றும் பகலில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக் கியமான பங்கை கார்டிசோல் அளிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத் துவதில் உடல் வேலை, உணவுக் கட்டுப் பாடு, சரியான தூக்கம் மற்றும் சஞ்சலமற்ற மனம் போன்றவை நான்கு தூண்களாக உள்ளன. மன அழுத்தம், சர்க்கரை அளவு அதி கரிக்க மிகவும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

 ஆய்வு குழுவினர் தொடர்ந்து நடத்தி வந்த ஆய்வில் இரத்த குளுக்கோஸ் அளவு உடலில் அனைத்து திசுக்களின் இயக்கங்க ளுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்த குளுக்கோஸ் அளவை சரி விகிதத்தில் கொண்டுசெல்லத் துணை நிற்பதோடு செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும் அளவையும் கார்டிசோல் கட்டுப்படுத்து கிறது என்று மருத்துவர் ஜோசப் கூறுகிறார்.  இந்த கார்டிசோல் செயல்பாடுகள் மனநிலையினைப் பொறுத்து அமைகிறது, அதிக மன அழுத்தம் இதன் சுரப்பைத் தடை செய்கிறது அல்லது அதிகரிக்கிறது. இதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கார்டிசோல் அளவு தேவைக்கு ஏற்றவாறு சுரக்கிறது, கார்டிசோல் தொடர்பான மேலும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறிய ஜோசப் முதலில் இந்த சுரப்பி வெறும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முக்கியப் பங்குவகிக்கிறது என்று மருத்துவ உலகம் கருதியது.

 ஆனால் தற்போதைய ஆய்வின் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக் கும் தருணத்தில் கார்டிசோல் அளவுக்கு ஏற்றவாறு சுரந்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் முடிந்தவரை கவலைகளைப் புறந் தள்ளி மகிழ்வோடு இருக்கவேண்டும் என்று மருத்துவக் குழு அறிவுறுத்துகிறது.

No comments:

Post a Comment