ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. பதவி உயர்வில் ஓபிசி பிரிவு ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என அகில இந்திய பல்கலைக்கழக ஓபிசி மாணவர்கள் அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

·     கேரள மாநிலத்தில் 26 வயது பெண் மேயராகும் மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதே நேரத்தில் வேறு தாழ்த்தப்பட்ட ஜாதி ஆடவரை மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக அவளது தந்தை கொன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது இன்னமும் ஜாதி ஆணவம் ஒழிக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. இந்த அவல நிலையை  நீக்கிட அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். திராவிடக் கட்சிகளை அழித்திட துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளும் முனைகிறார்கள் என அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மறைமுகமாக பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.

·     தமிழ் நாடு அரசு நடத்தும்கல்வி டிவியில், திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் காட்டுவதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     .பி.யில் வாகனங்களிலும், நம்பர் பலகையிலும் ஜாதி பெயர்களை எழுதினால் அபராதம் என .பி. அரசு அறிவித்துள்ளது.

·     21 வயது நிரம்பிய ஹிந்து பெண், முஸ்லீம் ஆணை திருமணம் செய்து வாழலாம் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக காவல்துறை ஹிந்து பெண்ணை மணமகனிடம் இருந்து பிரித்து சிறுவர் விடுதியில் சேர்த்து அதன்பின்னர் அப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்தது. இதற்கு எதிரான வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     டில்லியில் மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் இருந்து 1200 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ராஜஸ்தான், குஜராத், அரியானா விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் சேர்ந்துள்ள னர். இதன் காரணமாக டில்லி ஜெய்பூர் நெடுஞ்சாலை டிசம்பர் 13 முதல் முடக்கப்பட்டுள்ளது.

·     கரோனா தொற்றைக் காரணம் காட்டி, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை தனியார்க்கு விற்கும் அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அது நடந்தே தீரும் என மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கம் வளர்ச்சியில் இந்திய சராசரிக்கும் மேலாக உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொய்யுரை செய்கின்றனர். தவறான தகவலைத் தரும் அமித் ஷா மேற்கு வங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கு வங்க  நிதி அமைச்சர் அமித் மித்ரா பேசியுள்ளார்.

- குடந்தை கருணா

28.12.2020

Comments