கோவிட் தொற்று காலங்களில் இணைய தள வழி கல்வி சேவை

சென்னை, டிச. 28- கரோனா (கோவிட் 19) நோய் தொற்று காலத்தில் கிராமப்புற - நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்காக எட்டெக் ஸ்டார்ட்அப் விருதை வென்ற ஜெர்குமலோ டெக்னாலாஜிஸ் நிறுவனம், அதன் மென்பொருள் ஜீகிளாஸ்ரூம் (Zeclassroom) என்ற இணைய அலைவரிசையை சிறப்பாக வடிவமைத்துள்ளது. இது எளிதானது எந்த வயதினருக்கும் அதிக பயிற்சி இல்லாமல் எளிதில் பயன் படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், கல்வி யாளர்களும் தூரத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் இணைக்க முடியும், கற்றலுக்கு எந்த தடையும் இல்லை என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி.சாய்ராம் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்புக்கு தலைவர் நியமனம்

சென்னை, டிச. 28- தொழில்துறை மேம்பாட்டிற்கும், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வழி நடத்திவரும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) பிக்சி-இன் 2020-2021 ஆண்டுக்கான தலைவராக உதய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புத்தாக்கமான வணிகம் மற்றும் பண்டைய பொருளாதாரம் போன்ற இரு துறைகளிலும் பன்முகத் தன்மையோடு சிறந்து விளங்குபவர் ஆவார்.

கோவிட் 19 நோய் தொற்று பிடியிலிருந்து இந்திய பொருளாதாரமும், வர்த்தக உலகமும் வெளிவரவும் பல்வேறு வர்த்தகங்களை வெற்றிகரமாக தகவல் படுத்தவும் செயல் திட்டங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments