டி-சர்ட்டில் போன் சார்ஜ் செய்யலாம் நாம் அணியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

டி-சர்ட்டில் போன் சார்ஜ் செய்யலாம் நாம் அணியும்

டி-சர்ட் மூலம் போனை சார்ஜ் செய்யும் தொழில் நுட்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  டி-சர்டில் உள்ள நைலான் மற்றும் நமது உடல் உரசும் போது அதில் ஏற்படும் மின் சக்தி பயன்பாட்டிற்கான சாதகமாகும் என்று கண்டறிந்துள்ளனர்.  அதே போல் அங்கிருந்து இதன் மூலம் உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கூட அளவிட முடியும். ஜெர்மனியில் உள்ள பாத் பல்கலைக் கழகத்தின் பாலிமர் ஆய்வுத்துறை, போர்ச்சு கலில் உள்ள கொம்பரா பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து பிளாசோ எலக்டிரிக் குறித்து ஆய்வு நடத்தியது, இந்த ஆய் விற்குப் பேராசிரியர் கர்னால் அஸ்தி மற்றும் அவரது மாணவர் சலீம் அன்வர் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை உலகிற்குத் தந்துள்ளனர்.

  பிளாசோ எலக்ட்ரிக் என்பது இயங்கும் பொருட்களில் இருந்து வெளிவரும் ஆற் றலை மின்னாற்றலாக மாற்றும் ஒன்றாகும். எளிமையாகக் கூறப் போனால் நாம் விரலால் எந்த ஒரு பொருளைத் தட்டினா லும் அந்த உரசலில் ஏற்படும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற முடியும்  மிகவும் குறைவான இந்த மின்னாற்றலை மின் பெருக் கிகள் மூலம் அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.  இவ்வாறு பெறப் படும் மின்னாற்றலை மின்கலத்தில் சேமித்து நமது மொபைல் போன் சார்ஜ் செய்யப் படும் . 

இதில் பாலிமர் இழைகள் அதிக மின் னாற்றலை வெளிப்படுத்த வல்லவைகள். இந்த பாலிமர் இழைகளுள் நைலான் போன்றவை அடங்கும். நாம் அணியும் நைலான் ஆடைகள் நமது உடலில் உரசும் போது மின் ஆற்றல் வெளிப்படுகிறது, உடல் மிகவும் குறைவாக ஒவ்வோரு உரசலில் போது வெளிப்படும் மின்னாற் றலை ஒருங்கிணைத்து மின் பகுப்பு மூலம் இந்த மின்சக்தியை அதிகமாக்கி அதை மின்கலத்தில் சேமிக்க முடியும். இது தொடர்பாக 'அட்வான்ஸ்டு பங்க சனல் ஜெர்னல் ஆப் மெட்டீரியல்' என்ற இதழுக்குப் பேட்டியளித்த அசாடி பிளாசோ, "எலக்ட்ரிக் என்பது அனைத்து உரசும் பொருளிலும் உருவாகும் ஒன்றாகும் அது நமது பாதங்கள் டைல்ஸ் மற்றும் தரையில் உரசும் போது, நாம் இருக்கையில் அமரும் போது ஏற்படும் உரசல்கள் போன் றவற்றில் மின்சாரம் உருவாகும் இதைச் சேமிப்பது ஒரு சவாலான செயலாகும்.  

இந்தச் சவாலை எற்றுகொண்ட நானும் எனது மாணவரும் மனித உடலில் அணிந் துள்ள நைலான் ஆடையில் இருந்து தோன் றும் மின்னாற்றலைப் பயன்பாட்டிற்குத் தேவையான மின்சாரமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

நைலான் என்பது செயற்கை வேதிப் பொருட்களின் கலவை ஆகும்.  இவ்வகை மின்னாற்றலைச் சேமிக்கப் பெறுவது இந்த பிளாசோ எலக்ட்ரிக் துறையில் மிகப்பெரிய வெற்றியாகும். இனி ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி மற்றும் இதர கெபா சிடர்கள் வைக்கும் வகையில் ஆடைகளை வடிவமைக்கலாம். இதில் உள்ள பேட்டரி மொபைல் போன் மற்றும் இதர கையில் எடுத்துச்செல்லும் எளிய சாதனங்களை சார்ஜ் செய்யப் பயன்படும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment