குழந்தைகளும்-கரோனாவும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

குழந்தைகளும்-கரோனாவும்!

அமெரிக்காவில் உள்ள வாண்டர் பில்ட் பல்கலைக்கழகம் மருத்துவ நிலைய (VUMC) விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், கரோனா வைரஸ் தாக்கக் கூடிய ரிசப்டர் புரதம் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதாகக் கண்டுபிடித்துள் ளனர். இந்த புரதம் நுரையீரலில் உள்ள ஏர்வே எபிதீலியல் சொற்களைத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குறிப் பிட்ட புரதத்தின் செயல்பாடுகளைத் தடுத்து முதியவர்களை கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிவகை செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குத்தி கிழிக்கும் வைரஸ்

இதுதொடர்பான விவரங்கள் ஜாரன்ல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, வைரஸ் நுண்கிருமியைச் சுவா சித்தவுடன் அது நேரடியாக நுரையீரலுக்குச் செல்கிறது. பின்னர் குறிப்பிட்ட நுரையீரல் செல்களின் மேற்பகுதியில் இருக்கும் ACE2 என்ற ரிசப்டர் மீது ஒட்டிக் கொள்கிறது.  இதையடுத்து TMPRSS2 என்ற மற்றொரு செல்லுலார் புரதத்தின் உதவியுடன் சொற்களின் வெளிப்புற சுவரைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றுவிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக படிப்படியாகச் சொற்களை அரிக்கும் செயல்களில் வைரஸ் ஈடுபடுகிறது. இவ்வாறு தான் நுரையீரல் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்கிள் செல் RNA வரிசைப் படுத்துதல் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலிகளின் நுரையீரல் செல்கள் ஒவ்வொன்றிலும் ஜீன்களின் செயல் முறைகளை நுட்பமாக ஆராய்ந்துள்ளனர்.  அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் வைரஸ் தொற்று இருக் கும் வரையிலான ஜீன்களின் செயல்பாடு களைக் கண்காணித்துள்ளனர்.

எலிகளின் நுரையீரல்களில் ACE2 என்ற ரிசப்டரின் ஜீன் மிகவும் குறைவான செயல்பாட்டையே வெளிப்படுத்தியுள் ளது. அதேசமயம் TMPRSS2  புரதமானது அதிகப்படியான பிரதி வினைகளை வெளிக்காட்டியுள்ளது. மேலும் பல்வேறு வயதுடைய மனிதர்களின் நுரையீரல் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றில் TMPRSS2  புரதத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து உள்ளனர். இதனை எலிகளில் வெளிப் பட்ட செயல்பாடுகளுடன் ஒப்பீடு செய் திருக்கின்றனர். மேற்கூறிய ஆய்வுகளின் மூலம் ஜிவிறிஸிஷிஷி2 புரதத்தைக் குறிவைத்து மருந்துகளைச் செயல்படுத்தினால் கரோ னாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment