பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதியை காப்போம்

தளபதி மு..ஸ்டாலின்

சென்னை,டிச.28 நெல்லை சமூகநீதி மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதி காப்போம் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு..ஸ்டாலின் கூறினார்.

நெல்லையில் நடைபெற்ற பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் திமுக தலைவர் மு..ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று நிறைவுரை யாற்றினார். அப்போது மு..ஸ்டாலின் பேசிய தாவது: பெரியார் சமூகநீதி மாநாட்டை எழுச்சியுடனும் உணர்ச்சி யுடனும் நெல்லையில் ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர் சூர்யா சேவி யர்க்கு எனது மனமார்ந்த பாராட் டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரைப் பார்த்து இன்னமும் பயப்படுகிறார்கள். இறந்து அய்ம்பது ஆண்டுகள் ஆனபிறகும் பயப்படு கிறார்கள். அறிஞர் அண்ணாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். கலைஞர் என்ற பெயரைச் சொன்னால் இன்னமும் சிலருக்கு பயமாக இருக் கிறது. என்ன காரணம்? இவர்கள் ஆயுதம் ஏதும் வைத் திருந்தார்களா? ஆயுத அமைப்பை நடத்தினார்களா? இல்லை, இவர்கள் வைத்திருந்தது அறிவாயுதம், இவர்கள் வைத் திருந்தது உண்மை என்ற கேடயம், அறிவும் உண்மையும் ஒரு இயக் கத்திடம் இருக்குமானால் அந்த இயக்கத்துக்கு வேறு எதுவும் தேவையில்லை. அத்தகைய அறிவியக்கமாம் திராவிட இயக்கம் இந்தத் தமிழ் மக்களுக்குத் தயாரித்துக் கொடுத்த கொடைதான் சமூகநீதி, டஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை, அந்தச் சமூகநீதித் தத்துவத் தின் நூற்றாண்டு விழாவைத்தான் நாம் கொண்டாடிக் கொண்டு இருக் கிறோம். 

இடஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை. அதைப் படிப்படியாகச் செய்து வருகிறார்கள். எந்தச் சூழ்நிலை வந் தாலும் சமூகநீதியை, இடஒதுக் கீட்டை, வகுப்பு உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை. திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூகநீதியின் எதிரியாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வை அடைந்து விடுவார்கள், ஏழைகள் ஏற்றம் பெற்று விடுவார்கள் என்று நினைப்பவர் கள்தான் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த ஒரு நோக்கத்துக்காகத்தான் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

தமிழர்களாகிய பலர் கோடிக் கணக்கான ஒடுக்கப் பட்ட மக்கள் -லட்சக்கணக்கான ஏழை மக்கள்- வாழ்வு பெற வேண்டும் என்ப தற்காகத் தான் திமுக ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு மு..ஸ்டாலின் கூறினார்.

 

 

இயற்பியல் பேராசிரியர் செ..வீரபாண்டியன் மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்

தஞ்சையில் பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து பணி யாற்றியவரும், இயற்பியல் பேராசிரியராக இருந்தவருமான செ..வீரபாண்டியன் அவர்கள் நேற்று (27.12.2020) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

நம்மோடு பணியாற்றிய அவர், பிறகு பல்வேறு நிலைப் பாடுகள் எடுத்தாலும்கூட, ஆரம்ப  காலத்தில் அவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாத ஒன்று. அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

 

 

சென்னை       தலைவர்,

28.12.2020          திராவிடர் கழகம்  

Comments