பெரியார் பெருந்தொண்டர் வில்லிவாக்கம் அர. சிங்காரவேலுவின் படத்திறப்பு நினைவேந்தல்

காணொலியில் கழகத் தலைவர் நினைவேந்தல் உரையாற்றினார்

சென்னை, டிச.28 பெரியார் பெருந்தொண்டர் வில்லிவாக்கம் அர. சிங்காரவேலு அவர்களின் நினைவேந்தல்படத்திறப்பு நிகழ்ச்சி 27.12.2020 அன்று காலை 11 மணிக்கு கொளத்தூர் வி.வி. நகரிலுள்ள (பூம்புகார் நகர்) அவரது இல்லத்தில் உணர்வு பூர்வ மான இயக்க நிகழ்ச்சியாக எழுச்சியுடன் நடைபெற்றது.

பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அர. சிங்காரவேலுவின் இயக்கப் பணிகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார். சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி மூலமாக அர. சிங்காரவேலுவின் உருவப் படத்தினைத் திறந்து வைத்தார். அவரது கொள்கைப் பிடிப்பையும், இயக்க வளர்ச்சிக்கென வடசென்னை மாவட்டப் பகுதிகளில் அயராது செய்த பணிகளையும், தமது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் பெரியார் பெருந் தொண்டராக சிறந்து வாழ்ந்த தொண்டு மனப்பான்மையையும், தமது பிள்ளைகளோடு அண்மையில் தம்மை சந்தித்து இயக்க நன்கொடை வழங்கி மகிழ்ந்ததையும் எடுத்துக் கூறி நினைவேந்தல் வீர வணக்கப் பேருரையினை காணொலி மூலமாக வழங்கினார்.

அய்.சி.எப் திமுக தொழிற்சங்கப் பேரவைத் தோழர், அர. சிங்காரவேலுவின் நண்பர் வாசுதேவன், கி. இராமலிங்கம் ஆகியோர் அர. சிங்காரவேலு குறித்து சில நிகழ்வுகளைப் பகிர்ந்தனர்.

தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்களின் சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அர. சிங்கார வேலுவின் உருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.

கழக இளைஞரணியின் செயல் வீரராக காலம் பாராது கடமை செய்த அர. சிங்காரவேலுவின் செயல் திறத்தையும், எதையும், எந்தப் பதவியையும் எதிர் பாராது உழைத்திடும் பெரியார் தொண்டர்களது பகுத் தறிவு வாழ்க்கை வாழ்ந்து, தமது பிள்ளைகளையும் பெரியார் கொள்கை நெறியாளர்களாக உருவாக்கியுள் ளதையும் எடுத்துக் கூறி நினைவேந்தல் உரை யாற்றினார்.

நிகழ்ச்சியில் கொரட்டூர் கலைஞர் பாசறை அமைப்பாளர் இரா. கோபால், வடசென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சி. பாஸ்கர், செந்துறை   இராசேந்திரன், பெத்துநாயக்கன்பேட்டை இராசேந் திரன், முத்தழகு மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

அர. சிங்காரவேலுவின் துணைவியார் சி. சரோ ஜினி, மகன்கள் சி. அன்புச்செல்வன், சி. அன்பழகன் சார்பாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு நன்கொடையாக ரூ.ஆயிரம் வழங்கப் பட்டது.

அர. சிங்காரவேலுவின் அண்ணன் அர. பத்ம நாபன், அண்ணியார் . பாரதி, இவர்களின் மகன்கள் சிந்தனைச்செல்வன், அறிவுச்செல்வன், சகோதரி - தேன்மொழி மற்றும் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

நிறைவாக செம்பியம் கழகத் தலைவர், அர. சிங்காரவேலுவின் மைத்துனர் . கோபாலகிருட்டிணன் நன்றி கூறினார்.


Comments