முட்டை அதிகம் சாப்பிடுபவர்களே.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

முட்டை அதிகம் சாப்பிடுபவர்களே....

 


முட்டை அது அவித்ததாகட்டும், முட் டைப் பொரியலாகட்டும், ஆம்லேட், பாதி  அவித்த முட்டை அல்லது பச்சை முட்டை ஆகட்டும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் விரும்பி உண்ணப்படும் உணவு ஆகும். ஆனால் அதிக அளவு முட்டை உண் பது நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீன மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகம் இணைந்து 1991 முதல் 2001 வரை ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வின் முடிவுகளை வைத்து மேற் கொண்டு தெற்கு ஆஸ்திரேலியா பல் கலைக்கழகம் முட்டை சாப்பிடாத நபர்கள் தினசரி முட்டை சாப்பிடும் நபர்கள், அதிக அளவு முட்டை சாப்பிடும் நபர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. சீனாவில் அதிக அளவு முட்டை பயன்பாட்டில் உள்ளது, அதே போல் உலக அளவில் நீரிழிவு நோய் அங்குதான் அதிகம் உள்ளது, இந்த அதிகரிப்பு குறித்து சீன மருத்துவர் மிங் லி கூறும் போது   நீரிழிவு நோய் ஆரம் பக் கட்டத்தில் உள்ளவர்கள்.

தங்களின் உணவு முறையைக்  கவனிக்கவேண்டும், நமது உணவு முறையில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் நமக்குச் சர்க்கரை நோயை ஏற் படுத்திவிடும். முக்கியமாக நீரிழிவு நோய் இரண்டாம் வகை உணவு முறையில் ஏற்படும் மாற்றத் தால் உருவாவது ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா பொதுவான உணவு முறையை தன்ன கத்தே கொண்டு இருந்தது. பலர் தங்களின் உணவில் தானியங்கள்,  காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளைப் பயன்படுத்தி வந்தனர். தற் போதைய காலகட்டத்தில் துரித உணவு பயன்பாட்டில் வந்து விட்டது, இந்த உணவு களில் முட்டை அதிகம் கலக்கப்படுகிறது. துரித உணவைச் சாப்பிடுபவர்கள் தானாகவே அதிக முட்டையை எடுத்துக் கொள் ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.  

இது இரத்தத் தில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து விடுகிறது, இந்த குளுக்கோஸ் எரி சக்தியாக மாற்ற மடையாமல் இரத்தத்தில் தங்கி விடுகிறது. எங்களது ஆய்வின் படி ஒரு நாளைக்கு 38 கிராமிற்கு அதிகமாக முட்டையை எடுத் துக்கொள்ளும் நபர்களுக்கு 25 சதவீதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதே போல் தினசரி ஒரு முட்டையை எடுத்துக்கொள்பவர்களுக்கு 60 சதவீதம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று கண்டறியப் பட்டுள்ளது. எங்களின் இந்த ஆய்வுகளின் முடிவில் அதிக அளவு முட்டையை எடுத்துக்கொள் பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு கள் அதிகம் உள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது.  இந்த ஆய்வுகளுக்காக 50 வயதுக்குட்பட்ட 8,545 நபர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment