உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் தொலைநோக்குப் பார்வையின்றி கைநழுவிப் போகும் இந்தியாவிற்கான வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் தொலைநோக்குப் பார்வையின்றி கைநழுவிப் போகும் இந்தியாவிற்கான வாய்ப்பு



ஆசிய - பசிபிக் பகுதியில்  உள்ள, 15 நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் செய் வதற்கான ஒப்பந்தம் 19.11.2020 அன்று கையெழுத்தானது.

இது  உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் எப்.டி.ஏ., எனப்படும் தாராள வர்த்தக நாடுகள் இணைந்து, தாராள வர்த்த கம் செய்வதற்காக, ஆர்.சி.இ.பி., எனப்படும் மண்டல விரிவான பொருளா தார கூட்டணி என்ற அமைப்பைத் துவங்குவது குறித்து பேச்சு நடந்து வந்தது .'காணொலிக் கலந்தாய்வு' மூலமாக உறுப்பு நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந் தத்தை உருவாக்கு வது தொடர்பாக, 2012இல் இருந்து, பேச்சு நடந்து வந்தது.

ஆசிய - பசிபிக் பகுதியில் உள்ள, 15 நாடுகள் தொடர்ந்து பேச்சு நடந்தின.வியட் நாம் தலைநகர் ஹானோயில், இறுதிக்கட்ட பேச்சு நடந்தது. இதில், தென்கிழக்கு ஆசி யாவைச் சேர்ந்த, 10 நாடுகள் உட்பட, 15 ஆசிய - பசிபிக் நாடுகள் இடையே ஒப்பந் தம் ஏற்பட்டு, கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், சீனாவுக்கு பெரும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார பாதிப்பை பெரும்பாலான நாடுகள் சந்தித்து வரும் நிலையில், தாராள வர்த்தகம் வாயிலாக, சீனா ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப் புள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆசியான் அமைப்பில் உள்ள, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்க ப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டு உள்ளன. 30 சதவீதம்போலும், தாராள வர்த்தக நாடுகளான, ஆஸ்திரே லியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா ஆகியவையும் இதில் இணைந்துள்ளன. 'தற்போதுள்ள பன் னாட்டு சூழ் நிலையில், இந்த ஒப்பந்தம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள் ளது' என, சமூக வலைத் தளத்தில் வெளியிட் டுள்ள செய்தியில், சீனப் பிரதமர், லீ கேகி யாங்க் கூறியுள்ளார்.

சர்வதேச, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்த, 15 நாடுகளில் பங்கு, 30 சதவீதமாக  உள்ளது. அதனால், உலகின் மிகப் பெரிய தாராள வர்த்தக ஒப் பந்தமாக, இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் நிர்வாகம், இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு தெரிவித் திருந்தார். தற்போது, ஜோ பைடன் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால், அமெரிக்காவும் இதில் இணைய வாய்ப்புள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா விரும்பினால் இணைந்து கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

வரும் இருபது வருடங்களுக்குள் இறக் குமதிகள் மீது விதிக்கப்படும் சில வரிகளை ஒழிக்க இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க் கப்படுகிறது. மேலும், அறிவுசார் சொத்து, தொலைத் தொடர்பு, நிதி சேவைகள், இணைய வர்த் தகம் மற்றும் பிற முறையான சேவைகள் அடங்கிய பிரிவுகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டுள்ள நாடுகள், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும் பன்னாட்டு அளவில் 29 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் இந்த நாடுகளின் மூலம் தயாரிக் கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம், அமெ ரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் மற்றும் அய்ரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைக் காட்டிலும் விரிவானதாக இருக்கும்.

இன்று கையெழுத்தான இந்த ஒப்பந் தத்தில் இந்தியா இடம் பெறவில்லை. இருப் பினும் இந்த பேச்சுவார்த்தையின் ஆரம் பக்கட்டத்தில் இடம்பெற்ற இந்தியா கடந்த ஆண்டு இதிலிருந்து வெளியேறியது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், நாட்டில் மலிவான பல சீனப் பொருட்கள் வரத்து அதிகமாகும் என்றும், இது இந்தியா வில் சிறு தொழில் முனைவோருக்கு கடும் சிர மத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த விலை யால் பொருட்களை அவர் களால் வழங்க முடியாது என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா நுழையாத பட்சத்தில் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்ற கேள்வி யும் எழுகிறது.

"இந்த ஒப்பந்தமானது, 15 நாடுகளைக் கொண்டுள்ளது. உலகின் 30 சதவீத கட்டுமான தொழிற்சாலைகள் இந்த நாடுகளில்தான் உள்ளன. எனவே இந்த சூழலில் கட்டற்ற வணிக ஒப்பந்தம் இந்தி யாவிற்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்தியா அதன்மூலம் பல வர்த்தக வாய்ப் புகளைப் பெற முடியும்."

இந்தியா தனது கட்டுமான தொழிற்சாலை யில் பல நாடுகளை முதலீடு செய்ய அழைப் பது போலவே இந்த ஒப்பந்தமும் பல நாடு களை முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இல்லையென் றால் அதுகுறித்து பல கேள்விகள் எழுகின்றன,"

ஒரு கட்டத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்தி ரேலியாவைப் போன்று சீனாவைச் சார்ந்தி ருத்தலை இந்தியா குறைக்க விரும்பியது. ஆனால் தற்போது அந்த நாடுகளே இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

"இந்தியா சீனாவைச் சார்ந்திருத்தலைத் தவிர்த்தல் என்பது ஆறு ஏழு மாதங்களில் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள ஐந்து வருடங்களாவது தேவைப்படும். பிற நாடுகள் சீனாவை சார்ந்திருத்தலைத் தவிர்ப்பதைப் பல வருடங்களாக முயன்று வருகின்றன எனவேதான் அவை இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. ஏனென்றால் அவற்றிற்குத் தெரியும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கொண்டே சீனாவைச் சார்ந்திருத்தலைக் குறைக்கலாம் என்று,"

மேலும், சீனாவைத் தவிர்த்துப் பல துறை களில் வலுவான பல நாடுகளும் இந்த ஒப்பந் தத்தில் உள்ளன. குறிப்பாக மின்சாதனம், மற்றும் ஆட்டோ அலைப்பேசி துறையில் வலுவாக உள்ள நாடுகள் இதில் உள்ளன. இந் தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டு வரை வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சித்து வந்தது. மேலும் சீன முதலீட்டை அதிகரிக்க வும் முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment