முதுகுவலியா நுரையீரல் புற்றுக்கு வாய்ப்புள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

முதுகுவலியா நுரையீரல் புற்றுக்கு வாய்ப்புள்ளது

 



நுரையீரல் புற்றுநோய்  புகைப்பிடிப்பவர் களுக்கு மட்டுமே வருகிறது என்று நினைத் திருந்தோம்.  சமீபத்திய ஆய்வுகளில் புகை பிடிக்காதவர்களுக்கும் இந்த நோய்த் தொற்று வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.   புற்று நோய்களில் மிகவும் மோசமான பட்டியலில் நுரையீரல் புற்றும் ஒன்று ஆகும். இது மற்ற உறுப்பு நோய்களை விட முற்றிய பிறகே அதிகம் வெளியே தெரியும் வாய்ப்பு உள்ளதால் இது மிகவும் ஆபத் தானது ஆகும். சில முக்கிய நரம்புகள் நுரையீரலோடு தொடர்பு கொண்டதாகை யால் மிகவும் எளிதில் இந்தப்புற்றுநோய் உடலில் வேறு பாகங்களுக்குப் பரவி விடுகிறது.  எப்போதும் நுரையீரலில் புதிய திசுக் களின் வளர்ச்சியில் இருந்து மாறுபட்டு அதீத வளர்ச்சி புற்று நோயாக மாறிவிடு கிறது.  மிகவும் விரைவாக வளரும் நுரை யீரல் புற்று உடனடியாக காற்றுப்பாதைகள் மற்றும் உயிர்வாயு கரியமிலவாயு பரிமாற்றத்தைத் தடைசெய்கிறது, இதில் இனம் புரியாத திடீர் முதுகுவலி நுரையீரல் புற்றுநோயின் மிக முக்கிய அறிகுறி ஆகும்.

நுரையீரல் புற்றுநோய் வளரும் போது முதுகுதண்டுவடத்தில் அழுத்தம் ஏற்படுத்துகிறது.   நுரையீரல் புற்று உள்ளவர்களுக்கு நடு முதுகு மற்றும் முதுகின் மேல்பகுதி கீழ் முதுகில் வலி ஏற்படும்.  அதன் பிறகு வலி தோள்பட்டை, தொடையின் பின் பகுதி போன்றவைகளில் பரவி கை மற்றும் கால்கள் முற்றிலும் வலுவிழந்து காணப் படும்.   உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து நரம்புத் தளர்ச்சி ஏற்படும் நிலைக்கு வந்து விடும்.   தொடர்ந்து மூன்று வாரங்கள் இடை விடாத முதுகுவலி அதனைத் தொடர்ந்து தோள் பட்டை தொடைப்பகுதிகளில் வலி பரவினால் மருத்துவர்களின் ஆலோசனை களைப் பெறவேண்டும். எல்லா முதுகுவலி களும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறி குறிகள் அல்ல, முதுகுத்தண்டுவடத்தில் அடிபடுதல், மற்றும் முதுகுத்தண்டு என் புருக்கி நோய் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம், நுரையீரல் புற்றுநோய்க்கு என சில அறிகுறிகள்

ஓய்வு நேரங்களிலும் கடுமையான முதுகுவலி, இரவு நேரங்களில் தொடர்ந்து வலி ஏற்படுதல், படுக்கையில் படுத்திருக்கும் போது கடுமையான வலி,  ஆழ்ந்த மூச்சு விடும் போது முதுகில் கடுமையான வலி , மற்றும் எந்த ஒரு வலி நீக்க மாத்திரை மற்றும் பிசியோதெரபி போன்றவற்றையும் மீறி வலி அதிகரித்தல் போன்றவைகள் ஆகும். இதனைத் தவிர்த்து ஆழ்ந்த மூச்சு விடமுடியாமை, கடுமையான இருமல், மூச்சுவிடும் போது நெஞ்சுவலி, மயக்கம் மற்றும் இருமும் போது ரத்தம் வருதல் போன்றவை நுரையீரல் புற்றுக்கான அறி குறிகள் ஆகும்

- webmd.com

No comments:

Post a Comment