முகக்கவசம்-சுற்றுப்புறச்சூழலுக்கான புதிய தலைவலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

முகக்கவசம்-சுற்றுப்புறச்சூழலுக்கான புதிய தலைவலி



முகக்கவசம் அணிவது கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஓர் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை. அதே நேரம் அதன் தொடர்புடைய ஏராளமான சிக்கல்களும் இருக்கின்றன. முகக்கவசம் அணிவதனால் சருமம் சேதமடையும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது ஏற்கெனவே சருமப் பிரச்சினைகள் உள்ளவர்களின் சருமத்தை மேலும் மோசமடைய வைக்கும். இப்போது, சில முகக்கவசங்களில் தோல் பிரச்சினை களை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை பொருட் கள் உள்ளன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வாரம், அமெரிக்க ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் நோயெதிர்ப்பு கல்லூரியின் (ACAAI) வருடாந் திர அறிவியல் கூட்டத்தில், சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் மருத்துவர் யஷு தமீஜா, பல்வேறு விதமான சரும நிலைமைகளைக் கொண்ட ஓர் நோயா ளியின் வழக்கை முன்வைத்தார். ஏப்ரல் 2020 வரை கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய சருமம், முகக்கவசம் அணியத் தொடங்கிய பிறகு புதிய அறி குறிகள் தோன்ற ஆரம்பித்து உள்ளன. பாதிக்கப்பட்டவரின் முகத்தில், முகக்கவசத்தின் எலாஸ்டிக் பகுதிகளுடன் தொடர்பு கொண்ட இடங்களில் தடிப்புகள் தோன்றி யுள்ளன. எனவே, எலாஸ்டிக் அல்லது ரப்பர் பாகங்கள் இல்லாத முகக்கவசங்களை மக்கள் அணிய வேண்டும் என்று தமீஜா பரிந்துரைக்கிறார்.

மருத்துவர் தமீஜா தலைமையிலான ஆய் வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோயாளி யின் வயது 60. கறுப்பினத்தைச் சேர்ந்தவரான இவர் அரிக்கும் தோலழற்சி, contact dermatitis  மற்றும் க்ரோனிக் நாசி ஒவ்வாமை ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர். ஏப்ரல் 2020 வரை, அவருடைய தோல் நிலைகள் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், முகக்கவசம் அணிந்ததால், ஆங் காங்கே முகத்தில் மாறுபட்ட அறிகுறிகள் தோன்றத் தொடங்கின என மருத்துவர் தமீஜா ACAAIஇல் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

ஆரம்ப மருந்துகள் சருமத்தில் ஏற்பட்ட ராஷஸ்களை நீக்கவில்லை. அவர் முகக்கவசம் அணிந்தபிறகு, அதன் எலாஸ்டிக் பாகங்கள் பதிந்த இடத்தில் ராஷஸ் தோன் றியதைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பாகங்கள் சரியா கும் வரை ஸ்டீராய்டு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மருந்துகளை மருத்து வர்கள் பரிந்துரைத் தனர். நாங்கள் அவரிடம் எலாஸ்டிக் இல்லாத பருத்தி அடிப்படையிலான, சாயமில்லாத முகக்கவசங்களை பயன் படுத்தச் சொன்னோம். ஒரு வாரம் கழித்து தொடர்ச்சியான தொலைபேசி அழைப்பின் முடிவில், பாதிக்கப்பட்ட இடங்கள் சரியாகி வருவதாகக் கூறினார் என்று இணை ஆசிரியர் டாக்டர் கிறிஸ்டின் ஷ்மிட்லின் ACAAI அறிக்கையில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment