பொங்கல் விழாவிற்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 27, 2020

பொங்கல் விழாவிற்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை


புதுடில்லி, நவ.27- தமிழர் திரு நாளாம் பொங்கல் விழாவிற்கு உச்சநீதிமன்றத்திற்கு முதல் முறையாக விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்துக்கு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் திரு நாளாம் பொங்கலுக்கும் உச்சநீதிமன்றம் இயங்கும். இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் திருநாள் விழாவிற்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் ஆண் டிற்கு 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக் கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்படும். பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட விழா நாள் களுக்கு விடுமுறை. குறிப்பாக ஒவ்வொரு இசுலாமிய பண் டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படு கிறது. எனவே தமிழர் திரு நாளுக்கு விடுமுறை விட வேண்டுமென பல நாட்களா கவே கோரிக்கை முன்வைக் கப்பட்டது. அந்த கோரிக்கை இந்த ஆண்டு தான் நடை முறைக்கு வரவுள்ளது.


No comments:

Post a Comment