ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • நீதிமன்ற அவமதிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தனது கருத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உச்சமானது ஏனெனில் அதுதான் இறுதியான மன்றம். ஆனால், அதன் தீர்ப்பு தவறாகாது என்பதால் அல்ல என்பதை நீதிபதிகள் ஒரு போதும் மறக்கக் கூடாது என தொலைக்காட்சி ஊடக நெறியாளர் கரன் தாப்பர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி நோக்கி பேரணி நடத்திவரும் விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

  • மேற்கு வங்க ஆளு நர் ஜக்தீப் தான்கர், பாஜகவில் உள்ள சில குற்றவாளிகளோடு தொடர்பு வைத்துள்ளதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு திர்னாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • கரோனா தொற்று பரவல் தென்னகத்தில் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், புயல், குளிர் மற்றும் தேர்தல் ஆகியவை கரோனா தடுப்பைப் பாதிக்கும் என இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

  • மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அகில இந்திய அளவில் தொழிற் சங்கங்கள் நடத்தின. தமிழ் நாட்டிலும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கம் டில்லியை நோக்கி நடத்தும் பேரணியில் அய்ம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வ தாக தெரிவித்துள்ளனர்.

  • டில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் விவேகா நந்தர் சிலையை திறப்பதன் மூலம் அங்கு விமர்சன ஈடு பாடு இல்லாமல் பக்தியில் ஆழ்த்திட நடத்தப்பட்ட ஆக்கிர மிப்பு என அப்பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் ஜானகி நாயர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • வங்கிகளை தனியார் முதலாளிவசம் விடுவது தீங்கானது; பொருளாதார வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கு எதிரானது என மத்திய அரசின் நிதித்துறை மேனாள் செயலாளர் விஜய் கேல்கர் மற்றும் மேனாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்கள் சங்கர் ஆச்சார்யா, அரவிந்த் சுப்ரமண்யன் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.


தி டெலிகிராப்:  • அடுத்த கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தும் அய்.அய்.டி. மற்றும் நிட் கல்வி நிலையங்கள் சிலவற்றில் தாய்மொழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி நடத்திட வரும் விவசாயிகளை தடுக்கும் நோக்கில், கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீச்சி அடித்தல் ஆகியவற்றை பாஜக ஆளும் அரியான மாநில அரசு செய்வதற்கு, இடது சாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.


குடந்தை கருணா


27.11.2020


Comments