பெரியார் கேட்கும் கேள்வி! (175)


திராவிடர்களின் இடையில் ஒரு புதிய கிளர்ச்சி தோன்றி இருப்பதை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட சமயத்தில் கலைவாணர்கள், கலை வாழ்க்கைக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? நாங்கள் செய்து  வரும் வேலையை அழிப்பதுதானா? அதாவது புலவர்கள் இராமாயண, பாரதம், பெரிய புராணம் முதலிய ஆரியக்காவியம், புராணம், ஆகியவைகளை திராவிட மக்களிடை பரப்புவதும், இசைவாணர்கள் கிருஷ்ணன், ராமன், சுப்பன், முருகன் ஆகியவர்களைப் பற்றிப் பாடுவதும், நடிகர்கள் அப்புராணக் காவியக் கதைகளை நடிப்பதும்தானா இவர்கள் வேலை என்று கேட்கிறேன். இதற்கு ஆகவா திராவிட மக்கள் இவர்களை ஆதரிப்பது? இவர்கள் முன்னுக்கு வரவேண்டுமென்று பிரார்த்திப்பது?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 5.8.1944


‘மணியோசை’


Comments