செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது கடவுள் சிலை சிக்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது கடவுள் சிலை சிக்கியது

திருவள்ளூர்,ஆக.31, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுங்காவூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப் போது, அவரது வலையில் ஒரு தோல் பை சிக்கியுள்ளது. அந்த தோல் பையை வெளியே எடுத்துப் பார்த்தபோது, ஒன்றரை அடி உயரமும் 6 கிலோ எடையும் கொண்ட உலோகத்தாலான நடராஜர் கடவுள் சிலை இருந்துள்ளது. இதுகுறித்து, செங்குன்றம் காவல்துறையினருக்கு முரளி தகவல் அளித்தார். தகவலறிந்த காவல்துறையினர் சிலையை மீட்டு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். சிலையை தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, அந்த சிலை அய்ம்பொன்னால் ஆனதா அல்லது வேறு உலோகத்தால் ஆனதா என்பது தெரியவரும் என்றனர்.


 


கேரளாவில் மேலும் 4 மாதங்களுக்கு இலவச உணவுப் பொருள்


திருவனந்தபுரம், ஆக.31 ‘‘கேரளாவில் மேலும் நான்கு மாதங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும்,’’ என முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.


இது பற்றி திருவனந்தபுரத்தில்  அவர் அளித்த பேட்டி: கேரளாவில் வரும் 100 நாட்களில் 100 செயல் திட் டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி, கரோனா காலத்திலும் ஓணத்தை முன்னிட்டு 88 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவு பொருள், மேலும் 4 மாதங்களுக்கு வழங்கப்படும்.


No comments:

Post a Comment