நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழுவுள்ளது - ஜனநாயகம் அழிந்து வருகிறது : சோனியா காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழுவுள்ளது - ஜனநாயகம் அழிந்து வருகிறது : சோனியா காந்தி


புதுடில்லி,ஆக.31 காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என விரும்பும் சக்திகள், நாட்டில் வெறுப்பென்ற நஞ்சை பரவச் செய்து கொண்டிருக்கிறது.


நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது.  ஜனநாயகம் அழிந்து வருகிறது.  இந்திய மக்கள், நம்முடைய பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தங்களது வாய்களை மூடி இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.


நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் நம்முடைய ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது.  இந்த சூழ்நிலையை இந்தியா எதிர்கொள்ளும் என நம்முடைய முன்னோர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு மற்றும் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்டோர் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment