ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தான சட்டம் தேவை: - சித்திரபுத்திரன்
12.07.1925- குடிஅரசிலிருந்து.. ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டு வந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரிய…