தந்தை பெரியார் பொன்மொழிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

தந்தை பெரியார் பொன்மொழிகள்

 மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறதென்றால், மிருகங்களின் வாழ்வைப் போல்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, குழந்தைகள் பெற வேண்டியது, பின் அது குட்டிபோட வேண்டியது, அதைக் காப்பாற்ற வேண்டியது, என்று சாகிற வரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும், அதன் நல்வாழ்விற்குப் பாடுபடுவதிலும் கழிகிறதே ஒழியப் பகுத்தறிவு உடைய மனிதன் தனது சமுதாயத்திற்குப் பயன்படுவது கிடையாது.

ஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்க வளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கின்றவைகளை ஒழித்துவிட்டு, ஒழுக்கப் பிரச்சாரமும், ஒழுக்க ஈனராய், துரோகிகளாய் இருப்பவர்களை ஒழிக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும் முதன்மையுமான கடன் என்றே கருதுகிறேன். ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது

றீ நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது.  ஆனால், நமது நாட்டில் மதமும் மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.


No comments:

Post a Comment