கெஜ்ரிவாலின் தாக்கம் உ.பி.யில் நடக்கும் தேர்தல் நாடகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

கெஜ்ரிவாலின் தாக்கம் உ.பி.யில் நடக்கும் தேர்தல் நாடகம்!

featured image

 

அரவிந்த் கெஜரிவால் சிறையிலிருந்து வெளி வருவதற்கு முன்பு உத்தரப்பிரதேசம் முழுவதும் நரேந்திர மோடியின் படம் மட்டுமே அனைத்து தேர்தல் விளம்பரப் பதாகைகளில் நிறைந்திருந்தது, வேட்பாளர் பெயரோ அல்லது சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் பெயரோ படமோ இடம் பெறவில்லை.
அரவிந்த கெஜரிவால் சிறையிலிருந்து வெளிவந்து பொதுமக்கள் முன்பாக ஆற்றிய உரையில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதத்தில் சாமியார் முதல மைச்சரை தூக்கி விட்டு அங்கே குலுக்கல் முறையில் இவர்களின் கட்டளையில் இயங்கும் பொம்மை ஒன்றை அங்கே வைப்பார்கள் என்றார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் முழுவதும் பாஜக வினர் மோடி தனியாக இருக்கும் படத்தை உடனடியாக நீக்கி விட்டு அங்கு சாமியார் ஆதித்யநாத் படத்தோடு கூடிய மோடி படத்தை வைக்கின்றனர்.

இருப்பினும் சாமியார் ஆதித்யநாத் படம் மோடியின் படத்தை விட மிகச் சிறியதாகவே உள்ளது.

No comments:

Post a Comment