ஒருமைப்பாட்டின் இலக்கணமோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

ஒருமைப்பாட்டின் இலக்கணமோ?

புதுடில்லி, மே 15- உத்தரப்பிரதேசத்தின் ரேப ரேலி மக்களவை தொகுதி யுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரசின் கோட்டை

உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேப ரேலி ஆகிய 2 மக்களவை தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகின்றன. இங்கு நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் இருந்து காங் ரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2004 முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனி னும் 2019இல் அவர் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

இதுபோல் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த சோனியா காந்தி ராஜஸ்தா னில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டார்.

ராகுல் காந்தி போட்டி

இதனால் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவரா? ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார் பில் யார் களம் இறங்குவார்? என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இது தொடர் பாக பல் வேறு யூகங்களும் எழுந்தன. இறுதியாக ரேபரேலி தொகுதி வேட் பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டு, அவர் வேட்புமனுவும் தாக்கல் செய் துவிட்டார். அமேதி தொகுதி யில் நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியான கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார்.
தனது தாய் சோனியா 20 ஆண்டு களாக தக்க வைத்த ரேபரேலி தொகுதி யில் வெற் றிப் பெற ராகுல் காந்தி தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு

இந்த நிலையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் மக்களுடன் உணர்ச்சிப்பூர்வ மான குடும்ப உறவை கொண் டிருப்பதாகவும்,தேவைப்படும் போதெல்லாம் அந்ததொகுதிகளின் மக்களுக்கு தான் ஆதரவாக நிற்பேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உணர்ச்சிப் பூர்வமான காட்சிப் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காட்சிப் பதிவில் சோனியாவும், ராகுலும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் எடுக்கப்பட்ட தங்களது குடும்ப புகைப் படங் களை நெகிழ்ச்சியுடன் பார்க்கின்ற னர். மேலும் அந்த 2 தொகுதிகளின் மக்களுடனான தங்க ளது தொடர்புகளை இருவரும் நினைவு கூர்ந்தனர்.

6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காட்சிப் பதிவு எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி வெளி யிட்ட பதிவில், “ரேபரேலியும், அமேதியும் எங்களுக்கு வெறும் தொகுதிகள் அல்ல. அவை எங் களின் ஒவ்வொரு மூலையிலும் தலை முறைகளின் நினைவுகளை தாங்கி நிற் கின்றன.

100 ஆண்டுகளுக்கும் மேலான உறவு என் அம்மாவோடு இருக்கும் பழைய புகைப்படங்களை பார்க்கையில், நானும் என் அம்மாவும் முன்னெடுத்துச் செல் லும் இந்த சேவை பாரம்பரியத்தை தொடங்கி வைத்த என் அப்பா மற்றும் பாட்டியின் நினைவு வந்தது.

100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த உறவு, அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது.எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து உள்ளது. அமேதி மற்றும் ரேபரேலி எங்களை அழைக்கும் போதெல்லாம். நாங்கள் அங்கு இருப்போம்” என குறிப் பிட்டுள்ளார்.

காட்சிப் பதிவில் சோனியா காந்தி பேசுகையில், “ராகுலின் தாத்தா பெரோஸ் காந்தி 1952இல் ரேபரேலியின் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இறந்த பிறகு. ராகுலின் பாட்டி இந்திரா காந்தி ரேபரேலியை பிரதிநிதித்துவப் படுத்த தொடங்கினார். திருமண விழாக் களுக்கும் சரி, இறுதி நிகழ்வுகளின் போதும் சரி நாங்கள் கிராமம் கிராமமாக செல்வோம். வெள்ளம் மற்றும் வறட்சி யின் போது கூட கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்போம். அவர்கள் என்னை உடனடியாக ஏற்றுக் கொண் டனர். அவர்களுடன் நான் ஒருமகள் மற்றும் மருமகள் போன்ற உறவைப் பகிர்ந்து கொண்டேன்” என கூறினார்.

No comments:

Post a Comment