வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க விழா!

featured image

மகளிர் உரிமை-சமூக நீதி பற்றி முனைவர் துரை சந்திரசேகரன் உரை!
வாசிங்டன், மே 15- அமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின் விழா 12.5. 2024 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மேரி லேண்ட் பெத்த ஸ்டா வால்ட் விட் மன் உயர் நிலைப்பள்ளி மாநாட்டு அரங்கில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சி கள், நாடகம், இசை நிகழ்ச்சி போன்ற சிறப்புகளுடன் நடைபெற்றது.
தொடக்கத்தில் அன்னை யர் நாள் கொண்டாடப் பட்டது. அன்னையர் பலர் கேக் வெட்டி மகிழ்ந்தனர். நிகழ் வில் விஅய்டி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கோ.விசுவநாதன் கல்வி வளர்ச்சி சிறப்புகள் பற்றி உரையாற் றினார்.

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தமிழ் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்கு தமிழ்நாடு அரசு ஆற்றி வரும் பங்கு பணிகள் குறித்து உரையாற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை சந்திரசேகரன் அன்னையர் நாளின் சிறப்பு குறித்தும் மகளிர் உரிமை மற்றும் சமூக நீதிக்கு தந்தை பெரியார் ஆற்றிய பங்கு – பணிகள் குறித்தும் உரை யாற்றினார்.

வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத் தலைவர் அறிவுமணி இராமலிங்கம் அனைவரையும் வரவேற்று நோக்க உரையாற்றினார். அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பாலா சாமிநாதன், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க நிர்வாகி கள் கவிதா சுப்ரமணியம், பிரேம் குமார், திருநாவுக்கரசு, குழந்தைவேல், ராமசாமி, இயக்குநர்கள் எழில் வடிவன், அறிவுடைய நம்பி, மோகன்ராஜ், அசு வின் பாபு, விநாயகம், சங்கர், கணபதி, காமேஸ்வரி, சுபசிறீ, பாலாஜி, துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேனாள் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சுந்தர் குப்புசாமி, நாஞ்சில் பீட்டர், அகத்தியன், ராஜாராம், இந்திய தூதரக அலுவலர் பிரபாகரன் பால சுப்பிரமணியம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர்.

சிறப்பு விருந்தினர்க ளுக்கு தமிழ்ச் சங்க தலைவர் அறிவுமணி அவரவர் களின் சமுதாயப் பணிகளை பாராட்டி விருது வழங்கி சிறப்பித்தார். புஷ்பராணி வில்லியம்ஸ், சத்தியா அறிவு மணி, சத்யா நம்பி, கலைச் செல்வி சந்திரசேக ரன், அறி வுப் பொன்னி எழில் வடிவன், ஜாய், சுப்ரியா ஆகியோர் பங்கேற்றனர். பாடகி நித்யசிறீமகாதேவன் குழுவின ரின் தமிழிசை நிகழ்ச்சி இறுதி யாக நடந்தேறியது.

No comments:

Post a Comment