சீர்மரபினர் இன மக்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்கி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இராசா அருண்மொழி நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

சீர்மரபினர் இன மக்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்கி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இராசா அருண்மொழி நன்றி

சென்னை, மார்ச் 17 சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு சீர் மரபினர் நலவாரியத்தின் துணைத் தலைவர் இராசா அருண்மொழி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள நன்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சீர்மரபினர் இன மக்களுக்கு ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாபெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதால் குழப்பமான சூழ்நிலை இருந்தது. இதனை அகற்றுவதற்கான முயற்சியை எடுப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார். ‘சொன் னதைச் செய்வோம்’ என்ற முத்தமி ழறிஞர் கலைஞர் வழியில் செயல்படும் முதலமைச்சர் அந்த இரட்டை சான் றிதழ் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக் கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டார்கள். இம்மக்களின் கல்வி, வேலை வாய்ப் புக்கான பல்வேறு வழிமுறைகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தினார்.
1969 ஆம் ஆண்டு முதல்முதலில் முதலமைச்சர் ஆன கலைஞர் தான் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையை உருவாக்கினார். பிற்படுத் தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணை யத்தை அமைத்தார்கள். அந்தப் பரிந் துரைப்படி சமூகநீதியை அமல்படுத் தினார்கள். பிற்படுத்தப்பட்டோ ருக்கு 31 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார்.

1989 ஆம் ஆண்டு மிகவும் பிற் படுத்தப்பட்டோர் என புது இட ஒதுக்கீடு உரிமையை உருவாக்கி கல்வி, வேலை வாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்.. மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின ருடன் சேர்த்து 20 விழுக்காடு இட ஒதுக்கீடு இம்மக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. இதில் 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட் டுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் 2008 முதல் சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. பின்னர் 2019 ஆம் ஆண்டில் அன்றைய அரசால் மாறு பாடான அறிவிப்பு செய்யப்பட்டது. மாநில அரசின் உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (ஞிழிசி) என அழைக்கப்படுவர் எனவும், ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (ஞிழிஜி) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினர் களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்துள் ளார்கள்.
இலட்சக்கணக்கான மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஒற்றைக் கையெழுத்தில் உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர் களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மட்டுமல்ல திராவிடப் பேரினத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சரின் பொற்கால ஆட்சி தொய்வில்லாமல் தொடரட்டும் என வாழ்த்துகிறோம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment