தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய பாராட்டத்தக்க மாணவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய பாராட்டத்தக்க மாணவி

தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதிய பாராட்டத்தக்க மாணவி
ராமநாதபுரம்,மார்ச் 17- தந்தை இறந்த துக்கத்தி லும் பிளஸ்-2 தேர்வை மாணவி எழுதினார்.
மாரடைப்பால் இறப்பு

ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்ற கண்ணன். இவருடைய மனைவி தெய்வகனி. இவர்களுடைய மகள் ஆர்த்தி (வயது 17), ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 பொதுதேர்வு நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனியசாமி சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 15.3.2024 அன்று இரவு முனியசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற் பட்டு உயிரிழந்தார். தந்தை உடல் அருகே அமர்ந்து கதறி அமுதபடி இருந்த மாணவி ஆர்த்தியை உறவி னர்கள் ஆறு தல் கூறி தேற் றினர். சோகத்திலும் தான் தேர்வு எழுதப் போவதாக வும், நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.

பொருளியல் தேர்வு

தந்தையின் உடல் வீட்டில் இறுதி நிகழ்வுக்காக வைக்கப்பட்டி ருந்த நிலையில் ஆர்த்தி, தனது சகோதரர் சஞ்சய் உடன் அழுதபடியே பள்ளிக்கு சென்றார். பொருளியல் தேர்வு எழுதினார்.
தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது சோகம் தாங்கா மல் மாணவி அழுதுள்ளார். எதற்காக அழுகிறார்? என புரியாமல் ஆசிரியரும். மாணவிகளும் கேட்டனர். அப்போது, தந்தை இறந்துவிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மாணவிக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத வைத்தனர். தேர்வு முடிந்ததும் அவரை காட்டூரணியில் உள்ள வீட்டிற்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அதன்பின் முனியசாமியின் உடலுக்கு இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.தந்தை இறந்த நிலையிலும் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியின் செயல் உருக்கத்தை ஏற்படுத்தியது.

சண்டிகார் தேர்தல் அதிகாரி கூறுகிறார்
“நான் பைத்தியம்!”

சண்டிகர், மார்ச் 17 சண்டிகர் மேயர் தேர்தல் முறை கேடு தொடர்பான உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் மோசடி செய்த அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் தான் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜரான போது, தெளிவான மனநிலையில் இல்லை; முந்தைய நீதிமன்ற விசாரணையின் போது, எட்டு வாக்கு சீட்டு களைத் தான் சிதைத்தேன் என தவறுதலாக கூறி விட்ட தாகவும் கூறியிருக்கிறார் தான் நீண்ட நாட்களாக மன நோய் தொடர்பான சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரி வித்திருக்கிறார். அதற்கான சான்றுகளையும் அறிவித்துள்ளாராம்.

 

No comments:

Post a Comment