பிஜேபி அரசின் சாதனை உலகில் மிக மோசமான காற்று மாசு இந்தியாவிற்கு மூன்றாவது இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

பிஜேபி அரசின் சாதனை உலகில் மிக மோசமான காற்று மாசு இந்தியாவிற்கு மூன்றாவது இடம்

featured image

புதுடில்லி,மார்ச் 21- உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு பாடு நிலவும் நாடுகளின் பட்டிய லில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

காற்றின் தர அளவுகளை மதிப்பீடு செய்யும் சுவிட்சர்லாந்தின் ’அய்க்யூஏர்’ அமைப்பு 2023ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, காற்று மாசு அளவீடான ‘பிஎம் 2.5 செறிவு’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராமை விட அதிக மாக இருக்கக்கூடாது.
ஆனால் இந்தியாவின் வருடாந் திர ‘பிஎம் 2.5 செறிவு’ கன மீட்ட ருக்கு 54.4 மைக்ரோகிராமாக (54.4 ரீ/னீ3) உள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசமும் இரண்டா வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. 2022ஆம் ஆண்டில் இந்தியா 8ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3ஆவது இடம் பிடித்துள்ளது.

134 நாடுகளில் 7,812 இடங்களில் பெறப்பட்ட காற்றுத் தரம் தொடர்பான தரவுகளின் அடிப் படையில் இந்தப் பட்டியல் உரு வாக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான அளவில் காற்று மாசு நிலவும் முதல் 50 நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 42 நகரங் கள் இடம்பிடித்துள்ளன.
இதில் பீகாரில் உள்ள பெகுச ராய் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குவாஹாட்டி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பாகிஸ்தானின் லாகூர் உள்ளன. உலக அளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக டில்லி உள்ளது.

No comments:

Post a Comment