பீகாரில் 'இந்தியா' கூட்டணியின் மக்கள் கடல் பேரணி 5 இலட்சம் மக்கள்கூடி, எதிரணியைக் கலங்கடித்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

பீகாரில் 'இந்தியா' கூட்டணியின் மக்கள் கடல் பேரணி 5 இலட்சம் மக்கள்கூடி, எதிரணியைக் கலங்கடித்தது

featured image

அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்!

பாட்னா, மார்ச் 4 – பீகார் மாநிலத் தின் முக்கிய கட்சியான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி “ஜன் விஸ் வாஸ் யாத்திரை (மக்கள் நம்பிக்கை பயணம்)” 3.3.2024 அன்று பாட்னாவில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான மக்கள் கூட்டத்தில் சங்கமித்தது.
பிப்., 20 அன்று பீகார் மாநி லத்தின் முக்கிய நகரான முசாபர்நகரில் தொடங்கிய தேஜஸ்வியின் பயணம் 33 மாவட்டங்களுக்கும் சென்ற நிலையில், ஞாயிறன்று (3.3.2024) தலைநகர் பாட்னாவிற்கு வருகை தந்தது. பயண முடிவில் பாட்னாவின் காந்தி மைதானத்தில் பிரமாண்ட பேரணி யுடன் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் அழைப்பு விடுத்து இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பொதுக் கூட்டத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், மேனாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தலைமை வகித்தார். அவரது தாயாரும் மேனாள் முதல மைச்சருமான ரப்ரிதேவி மற்றும் அவ ரது சகோதரிகளும் பங்கேற்றனர்.

பா.ஜ.க.வை அகற்றினால்தான் வாழ்வை பற்றி சிந்திக்க முடியும்தேஜஸ்வி

“நாங்கள் நிதிஷ்குமாரை தவ றாக பயன்படுத்தவில்லை. அவ ரைப் பயன்படுத்தி முறைகேடு செய்யவில்லை. மக்களுக்கான நல்ல திட்டமான வேலையை மட் டுமே வழங்கினோம். இதனைக் கண்டு அஞ்சி நிதிஷ்குமார் மீண்டும் மோடியின் காலடிக்கே சென்றார். உண்மையில் நிதிஷ் குமாருக்கு வெட்கமாக இல்லையா? பாஜக பொய்களின் தொழிற்சாலை. ஆனால் ஆர்ஜேடி என்பது உரிமைகள், வேலைகள் மற்றும் வளர்ச்சியின் தொழிற் சாலை. நாங்கள் பீகார் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகள், வேலைகளுக்காக போராடுகிறோம். ஆனால் நிதிஷ் – பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே போராடுகிறது. ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் நிதிஷ் குமார் உள்பட அனைவரும் உயிரற்ற உடல்களைப் போல மக்களுக்கு எதுவும் செய்யாமல் சரிந்து விடுவார்கள். இவர் களை நாம் அகற்றினால்தான் வாழ்வை பற்றி சிந்திக்க முடியும்” என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உரையாற்றி னார்.
வெறும் பேச்சு மட்டும் தான்

மோடியிடம் உள்ளது : சீத்தாராம் யெச்சூரி

“பிரதமர் மோடி தமது உத்தர வாதங்களில் ஒன்றைக் கூட நிறை வேற்றவில்லை. அவருக்கு உத்தர வாதம் என்றால் என்னவென்று தெரி யாதது போல இருக்கிறார். வெறும் பேச்சு மட்டும் அல்லாமல் வேலை செய்ய வேண்டும். அப்பொழுது தான் உத்தரவாதம் நல்ல திட்டங்க ளாய் மக்களைச் சென்றடையும்” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
வகுப்புவாத மோடி அரசிற்கு விடைகொடுக்கலாம் : லாலு பிரசாத்
“ராஷ்டிரிய ஜனதாதளம் தாழ்த்தப்பட்டவர்கள் ஏழைகள், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு சொந்தமா னது. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப் படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் வாக்குறுதிகள் அனைத் தும் கானல் நீரைப் போன்று காணா மல் போனது. “இந்தியா” கூட்டணி யுடன் மக்கள் அனை வரும் ஒன்றி ணைந்தால் வகுப்புவாத மோடி அர சிற்கு விடைகொடுக்கலாம். கண்டிப்பாக விடை கொடுப்போம்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

பா.ஜ.க.வினர் அரசமைப்பை அழிப்பவர்கள் : அகிலேஷ்

“விவசாயிகள் மகிழ்ச்சியற்று உள்ளனர். இளைஞர் களுக்கு வேலை இல்லை. பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்களுக்கு என்ன செய்தனர் என்பதை மோடியே கூற முடியாது. உத்த ரப்பிரதேசம் போல பீகாரும் மாற்றத்தை நோக்கி நகருகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் மட்டுமல்ல; நாட்டின் அரசமைப்புச் சட் டத்தை காப்பாற்ற வேண்டிய முக் கிய நிகழ்வு ஆகும். இங்கு இருக்கும் தலைவர்கள் அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பவர்கள். ஆனால் பாஜகவினர் அரசமைப்பை தின்பவர்கள்; அரசமைப்பை அழிப்பவர்கள். இதனால் மக்களாகிய நீங்கள் பாஜகவை துரத்த வேண்டும்” என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசினார்.
மோடி கூறியது அனைத்தும் உத்தர வாதங்கள் அல்ல, பொய் மூட்டைகள் : கார்கே

“மக்களே உங்களிடம் மோடி கூறியது அனைத்தும் உத்தர வாதங்கள் அல்ல. பொய் மூட்டை கள். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் வேலைகள், வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம், ஒவ்வொருவருக்கும் வீடு என பல்வேறு வாக்குறுதி அளித்திருந்தார். கிடைத்ததா? இல்லை. இனிமேல் கிடைக்கவும் வாய்ப்பில்லை. காரணம் பிரதமர் மோடி பொய்யர்களின் தலைவர். மோடி பாட்னாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன் நிலைமையை நீங்கள் அனைவரும் தற்போது பார்க்கிறீர்கள்.
வேலை இல்லாத காரணத்தால் மோடியின் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். அனைவரையும் ஏமாற்று வது மோடியின் உத்தரவாதம். ஆனால் தேஜஸ்வி உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 17 மாதங்களில் லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளே இதற்கு உதாரணம்.
அரசியல் சட்டத்தைக் காப் பாற்ற வேண்டுமானால், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். நாட்டின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவது உங்கள் பணி. பாஜகவினர் அமலாக்கத்துறை, சிபிஅய் உள்ளிட்ட ஒன்றிய அமைப்பு களை வைத்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் “இந்தியா” கூட் டணி அஞ்சப் போவதில்லை. 2024இல் அதிகபட்ச இடங்களைப் பெற்று பாஜகவை தோற்கடிப் போம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறது : ராகுல்
‘ஜன்விஸ்வாஸ்’ பேரணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி. பேசியதாவது:-
பீகார் அரசியலின் ‘நரம்பு மய்யம்’. நாட்டில் மாற்றம் வரும் போது எல்லாம் அது பீகாரில் இருந்துதான் தொடங் குகிறது. இதன் பிறகு இந்த மாற்றம் மற்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இன்று நாட்டில் சித்தாந்தங்கள் மீது சண்டை நடக்கிறது. வெறுப்பும், வன்முறையும், ஆணவமும் இருக்கிறது. மறுபுறம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மரியாதை உள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்புணர்வைப் பரப்பு கிறது.. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் நாட்டில் வெறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப் படுகிறது. பிஜேபி பரப்பும் வெறுப்பு சந்தையில் நாங்கள் அன்பை விதைத்து வருகிறோம்.
ஒன்றிய அரசு ஒருசில 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சில தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவ சாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி இந்து அல்ல
– லாலுபிரசாத்

பிரதமர் மோடி இந்து அல்ல என பீகார் மாநிலம் ஜன் விஸ்வாஸ் பேரணியில் பேசிய லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி இந்து அல்ல என்றார். “பிரதமர் மோடி இந்து அல்ல; அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டை யடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது.” என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்து பேசினார்.

 

 

No comments:

Post a Comment