கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார் பா.ஜ.க.வில் இணைய அழைப்பு வந்ததாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார் பா.ஜ.க.வில் இணைய அழைப்பு வந்ததாம்

featured image

புதுடில்லி, பிப்.5 பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக் கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’’ என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது சட்டமன்ற உறுப் பினர்கள் 7 பேருக்கு தலா ரூ.25 கோடி கொடுக்க பாஜக முன்வந்தது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக, டில்லி காவல்துறையில் முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்வி அமைச்சர் ஆதிஷி ஆகியோர்மீது புகார் அளித்தது. மேலும், மதுபான கொள்கை ஊழல் வழக்கில், 5 முறை அழைப் பாணை அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வில்லை என டில்லி நீதிமன்றத்தில் அமலாக் கத்துறை சார்பில் நேற்று முன்தினம் (3.2.2024) மேல்முறையீடு செய்யப் பட்டது.
இந்நிலையில் டில்லியில் கிராரி என்ற இடத்தில் அரசுப் பள்ளி கட்டட அடிக்கல் நாட்டும் விழா வில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜக எங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைவர். நான்அவர்களுக்கு எதிராக செயல்படுகிறேன். இந்த நிலைப் பாட்டை கைவிட மாட்டேன். நான் பாஜகவில் இணைய வேண் டும் என கூறுகின்றனர். ஆனால், நான் ஒரு போதும் சேரமாட்டேன் என கூறிவிட்டேன்.
நான் எதற்கு பாஜகவில் இணைய வேண்டும்? நீங்கள் பாஜக வுக்கு சென்றால், நீங்கள் செய்த குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப் படும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறோம். சாலைகள் போடுகிறோம். கழிவுநீர் கால்வாய்களை சரி செய்கிறோம். இது குற்றமா? இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ஆதாரம் அளிக்க உத்தரவு: இதற்கிடையில், பாஜக தரப்பில், ‘‘பொய் குற்றச்சாட்டுகளை கேஜ்ரிவால் கூறி வருகிறார். அவருடைய ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜக.வில் இருந்து யார் பேரம் பேசியது. எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர் களிடம் பேசினார்கள் போன்ற விவரங்களை கெஜ்ரிவால் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத் தினர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக சுமத்திய குற்றச்சாட் டுக்கு ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும் என்று டில்லி காவல் துறை குற்றப் பிரிவு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர் ஆதிஷி ஆகிய இருவருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment