நிலா சுருங்குகிறது! விண்வெளிப் பயணத்தில் ஆபத்தா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

நிலா சுருங்குகிறது! விண்வெளிப் பயணத்தில் ஆபத்தா?

featured image

சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

பூமியுடன் ஒப்பிடும்போது நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும். இதனால் மெல்ல மெல்ல அதன் சுற்றளவு குறைந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சில மில்லியன் ஆண்டுகளில் நிலாவின் சுற்றளவு 150 அடி அளவுக்கு குறைந்துள்ளது. நிலாவின் சுற்றளவு மேலும் குறையும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இப்படி தொடர்ந்து அளவு குறைவதால் நிலநடுக்கம் நிலாவில் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நிலாவில் ஏற்படக்கூடிய நிலநடுக்கம் பூமியை போல் சாதாரணமாக இருக்காது. அவை சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பூமியிலிருந்து நிலாவுக்கு செல்பவர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடலாம். நிலாவின் தென் துருவத்தில் அதிக நிலநடுக்கம் ஏற்பட்டு நிலச் சரிவு உண்டாகியுள்ளதாக அறிவியலாளர்கள் அடை யாளம் கண்டுள்ளனர். இந்த புதிய தகவல்கள் மூலமாக பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நிலாவுக்கான பயணங்கள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலாவின் மேற்பரப்பை பல பில்லியன் ஆண்டு களாக வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறு கோள்கள் தாக்கி, பிளவுகளை ஏற்படுத்திருப்பதாக அறிவிய லாளர்கள் கூறியுள்ளனர். நிலாவின் சுற்றளவு குறை வதால் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தி உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், பூமியிலிருந்து விண்வெளிப்பயணம் மேற்கொள்ளும் நாடுகள் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment