பாட்னா, ஜன.31- “பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும்” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது:
“ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான நிதிஷ் குமாரின் கூட்டணி நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் தனது கூட்டணியை மாற்றுவார் என பல மாதங்களாக கூறி வருகிறேன். அவரது அரசிய லில் இது (அணி மாறுவது) ஒரு அங்கமாக உள்ளது. ஆனால், இது தற்போது பாஜகவிற்கும் பொருந்தி யுள்ளது. பல்வேறு விவகாரங்களில் நிதிஷ்குமாரை குற்றம்சாட்டி வந்த பா.ஜ.க., தற்போது அவருக்கு ஆதரவ ளித்து முதலமைச்சர் ஆக்கியுள்ளது.
பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற தலை வராக நிதிஷ்குமார் இருந்தாலும், இந்த கூட்டணி என்பது நிலைக்காது. இதனை நான் எழுதித் தருகிறேன். தற்போதைய சூழலில் பீகாரில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், நிதிஷ் குமாரை முகமாக கொண்ட பாஜகவால் ஆதரிக்கப் படும் கூட்டணி, மறுபுறம் ஆர்ஜேடி உள்ளிட்ட பிற கட்சிகள். இதே சூழலில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்காது. அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பல அதிரடியான முன்னேற்றங்கள் நிகழும். மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள், அந்த முன்னேற்றங் களை காண்பீர்கள்.
அடுத்த (2025-ஆம் ஆண்டு) சட்ட மன்ற தேர்தலில் நிதிஷ்குமார் 20 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால், நான் எனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு வட்டியுடன் திருப்பித் தரு வார்கள். 2025-ஆம் ஆண்டு தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பெரும்பான்மையை கைப்பற்றும்.” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, January 31, 2024
பா.ஜ.க. - நிதிஷ் கூட்டணி விரைவில் உடைந்துவிடும் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment