செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உடல் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உடல் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது!

featured image

 

கடலூர். ஜன, 25- உடல்நலக்குறைவால் ‘சுயமரி யாதைச் சுடரொளி’ ஆகிவிட்ட கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் உடல், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் ஜிப்மர் மருத்துவமனையில் முறைப்படி ஒப்படைக்கப் பட்டது.
கடந்த 22.01.2024 அன்று அதிகாலை 12:45 மணியளவில் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். 23 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று அன்னாருக்கு கண்ணீருடன் தனது வீரவணக்கம் செலுத்தி விட்டு சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார். பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையேற்று மாநில பொறுப்பாளர்கள் தங்களின் இரங்கல் மற்றும் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

இரங்கல், வீரவணக்கம் செலுத்திய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்கள்!
கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இரங்கல் கூட்டத்திற்கு தலைமை யேற்ற கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், இணைப்புரை வழங்கி சிறப்பித்த பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், வழக் குரைஞர் சு.குமாரதேவன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் இல.திருப்பதி, த.சீ.இளந்திரையன், திருத்துறைப்பூண்டி கிருட்டிணமூர்த்தி, ஆத்தூர் சுரேஷ், திராவிடமணி, கழக தொழிலாளரணி செய லாளர் திருச்சி மு.சேகர், காப்பாளர்கள் நெய்வேலி அரங்க.பன்னீர்செல்வம், தஞ்சை மு.அய்யனார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூர பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செந்துறை சு.அறிவன், பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ. அறிவுச்சுடர், கழகப் பேச்சாளர்கள் யாழ் திலீபன், இராம. அன்பழகன், மாநில இளைஞரணிச் துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ. வேலு, தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், க. சிந்தனைச் செல்வன், தே.செ.கோபால், தா.இளம்பரிதி, மாநில சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் இராம் சேவியர், தலைமைக் கழக அமைப்பாளர் க.நா.பாலு, வழக்குரைஞர் பூவை புலிகேசி, பேச்சாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக்கழக அமைப்பாளர் எல்லப்பன், மாநில இளைஞரணிச் செயலாளர்
இரா.வெற்றிக்குமார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.
அறிவுக்கரசு உடல் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைப்பு!
அதைத் தொடர்ந்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி “அறிவுக் கனல்” அய்யா சு. அறிவுக்கரசு அவர்களின் உடல், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் முறைப்படி ஜிப்மர் மருத்துவமனை பொறுப்பாளர்களிடம் கடலூரில் ஒப்படைப்படைக்கப்பட்டது. பின்னர் சிறிது தூரம் துயர உணர்ச்சி மேலிட்ட வகையில் கொள்கை ஒலி முழக்கங்களோடு ஊர்வலம் சென்று பின்னர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 23-01-2024 மாலை 5:30 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன் பரசன் தலைமையில் வீரவணக்க முழக்கத்துடன் அய்யாவின் உடல் “அனாட்டமி” அரங்கில் அமைந் துள்ள குளிரூட்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பெரியாரியல், அம்பேத்கரியல் அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். அங்கேயே இரண்டு நிமிடம் அறிவுக்கரசு அய்யாவின் உடலுக்கு இறுதியாக அமைதியுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதி ராஜ், அமைப்பாளர் ஞான வள்ளவன், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திரசேகரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
ஜிப்மர் மருத்துவமனையில் கலந்து கொண்ட தோழர்கள்!
நிகழ்வில் திராவிடர் கழக காப்பாளர்கள் இர.ராசு, இரா.சடகோபன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி ராசு, லோ.பழனி, பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராஜன், செயலாளர் மு.குமரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செயலாளர்
ஆ.சிவராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர்களம் தலைவர் அழகர், அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜி,சு.துளசிராமன்,கல்பனா துளசிராமன், விஜயலட்சுமி, சித்தார்த், வீரமணி கண்ணன், உலகநாதன், சார்வாகன், ஆறுமுகம், கிருஷ்ணசாமி மற்றும் அறிவுக்கரசு குடும்பத்தின் சார்பில், கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், அறிவுக்கரசு அய்யாவின் பேரன் செங்கோ ஆகியோர் உடன் சென்று திரும்பினர்.

No comments:

Post a Comment