கியான் வாபி மசூதி இடம் சர்ச்சையை கிளப்புகிறது விஷ்வ ஹிந்து பரிஷத் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

கியான் வாபி மசூதி இடம் சர்ச்சையை கிளப்புகிறது விஷ்வ ஹிந்து பரிஷத்

புதுடில்லி, ஜன. 29- உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள கியான்வாபி இடத்தை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்(விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.

வாராணசியில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் கோயில் இருந்ததற்கான உறுதிப்படுத்தும் ஆதாரங்களை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்அய்) சில நாட்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது. இந்த நிலையில், விஎச்பி அமைப்பின் தலைவர் அலோக் குமார் வெளியிட்ட அறிக்கையில், “ கியான்வாபிமசூதியில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே மசூதியை வேறுபொருத்தமான இடத்துக்கு மாற்று வது குறித்து இன்டெஜாமியா கமிட்டி திறந்த மனதுடன் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். கியான்வாபி மசூதியின் உண்மையான உரிமையாளரான காசி விஸ்வநாதரின் இடத்தை இந்து சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், இந்து அமைப்பினரின் முறையான கோரிக்கையை ஏற்று அங்கு வழிபாடு நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

கியான்வாபி வளாகத்தை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வந்த விஎச்பி அமைப்பு தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமுகமான அணுகுமுறையில் முஸ்லிம் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது அதன் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஒரு பெரிய மாற்றமாக தற்போது பார்க்கப்படுகிறது.

கியான்வாபி மசூதியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, அந்த மசூதி இந்து கோவிலின் மீது கட்டப்பட்டுள் ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு தொல்லியல் துறையிடம் வாராணசி மாவட்ட நீதிமன்றம் ஜூலை 2023இல் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில், தொல்லியல் துறையின் அறிக்கை வாராணசி நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் நகல்களை கடந்த 25.1.2024 அன்று இந்து மற்றும் முஸ்லிம் வழக்குரைஞர் களுக்கு நீதிமன்றம் வழங்கியது.

No comments:

Post a Comment