'உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்!' வேலையைப் பறிகொடுத்த 7,785 ஊழியர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

'உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்!' வேலையைப் பறிகொடுத்த 7,785 ஊழியர்கள்

featured image

சென்னை, ஜன.20 2024ஆம் ஆண் டின் முதல் இரண்டு வாரங்களே முடிந்துள்ள நிலையில், 7,785 ஊழி யர்களை ‘டெக் நிறுவனங்கள்’ வேலையை விட்டு அனுப்பியுள் ளதாக அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.
பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில் நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொரு ளாதார மந்த நிலை உள்ளிட்ட பல காரணங்களால் ‘லே ஆஃப்’ எனப் படும் ‘வேலை பறிப்பு’ நடப்பதாக காரணம் கூறப்படுகிறது. இது குறித்து அண்மையில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், தொழிலதிபருமான பில் கேட்ஸ், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த அச்சம் வருகிறது.

ஆனால் புதிய தொழில்நுட்பத் தால் வேலை வாய்ப்புகள் பறி போகும் என்பது உண்மை கிடை யாது எனத் தெரி வித்தார். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண் டில் கூகுள் நிறுவனம் அதன் உலக ளாவிய பணியாளர்களில் 12,000 பேரை, அதாவது 6 விழுக்காட்டினரை வேலையை விட்டு அனுப்பும் முடிவை எடுத்தது. இந்த பணிநீக்க நடைமுறைகள் நிறுவனத்திற்கு அத்தியாவசிய மானது என்று அதன் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கி யிருந்தார். இந் நிலையில், பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், இந்தாண்டு ஜன வரியின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழி யர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
ஜனவரி மாதத்தின் முதல் பாதி யில் மட்டும் இதுவரை 7,785 ஊழி யர்களை பணி நீக்கம் செய்துள்ளன. நிறுவனங்களின் பணி நீக்க நட வடிக்கைகளை ஆராயும் Layoffs.fyi  என்ற கண்காணிப்பு இணைய தளத்தின் தரவு களின்படி, இந்த கூற்றுகள் கிடைத் துள்ளன.
அமேசான் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகளில் பணி யாற்றும் நூற்றுக்கணக்கான ஊழி யர்களை பணிநீக்கம் செய்தது.

அமேசான் மற்றும் கூகுள் இரண்டும் செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவ னத்துடன் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
இந்த போட்டியில், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட் பத்திடம் பணியை ஒப்படைத்து விட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர் களை பணிநீக்கம் செய்தும் வரு கின்றன. இதனால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல; ஏற்கெனவே பணியில் உள்ள அய்.டி. ஊழியர்கள் அதிர்ச் சியில் ஆழ்ந்துள்ளனர்

No comments:

Post a Comment