கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வழங்க தனியாருக்கு குத்தகை - கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* "வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட பிரதமரின் இடைவிடாத முயற்சிகள்" என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு - ஒரு முறை பயணம் மேற்கொண்டதையே வட கிழக்கில் அமைதி ஏற்பட்டு விட்டதாக ஷா கூறுவதாக - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.

* மணல் கொள்ளை வழக்கில் அமலாக்க இயக்குநரகம் எங்களை மோசமாக நடத்தியதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

தி டெலிகிராப்

* மல்லிகார்ஜுன் கார்கே குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், அனைத்துப் பேச்சாளர்களும் – சோனியா காந்தி, தி.மு.க.வின் டி.ஆர்.பாலு, சி.பி.எம். கட்சியின் சீதாராம் யெச்சூரி, ஆர்.ஜே.டி.யின் மனோஜ் ஜா - இந்த கடினமான காலங்களில் தலைமைப் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் என புகழாரம்.

* தற்போதுள்ள குற்றவியல்-தண்டனைச் சட்டங்களை மாற்றியமைப்பது அரசியலில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே அனைத்துத் தரப்பினரிடத்தும் ஒருமித்த கருத்தை உருவாக்குங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வலியுறுத்தியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* 2024 தேர்தலை முன்னெடுப்பதற்கு காங்கிரசின் மீது இந்தியா கூட்டணி முழு நம்பிக்கை வைத்துள்ளது என தலைவர்கள் பேச்சு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment