எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் பெரியார் பிறந்த நாள் விழா

சென்னை, அக். 7- எல்.அய்.சி. பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சென்னை கோட்டம் 25ஆவது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி   சேத்துப்பட்டு கிளப் சாலையில் உள்ள மலையாள சங்கத்தில் நடைபெற்றது. 

நலச்சங்கத்தின் பொருளாளர் என்.கோட்டீஸ்வரனின் வரவேற்பு ரையுடன் கூட்டம் தொடங்கியது. கோட்டத் தலைவர் எஸ்.முரளி தலைமையேற்றார். கோட்டப் பொதுச்செயலாளர் ச.இளைய பெருமாள் ஆண்டறிக்கையை அளித்தார்.

எல்.அய்.சி.யின் எஸ்.சி./எஸ்.டி. சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. சங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தினர். 

இட ஒதுக்கீட்டினை நீர்த்து போகச் செய்யும் ஒன்றிய மோடி அரசின் மோசடியையும் அதனை முறியடிக்க தந்தை பெரியார் மற் றும் அம்பேத்கர் கொள்ககைகளை இளைய சமுதாயத்தினர் உள்வாங் குவதன் அவசியத்தையும் நிர்வாகி கள் விளக்கி பேசினார்கள். 

இட ஒதுக்கீட்டினால் பணி நியமனம் பெற்றவர்கள் கூட தந்தை பெரியார் மற்றும் அம்பேத் கர் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து பேசினார்கள். 

கூட்டத்தில் சென்னை  1இன் கோட்டத்தின் புதிய நிர்வாகிகளாக ஜெ.எம்.எல்.ஆன்டனி தலைவராக வும், துணைத் தலைவர்களாக என்.கோட்டிஸ்வரன், எம்.பெரு மாள், பொதுச்செயலாளராக எஸ். முரளி, இணைச் செயலாளர்களாக எல்.ஆர்.அமலோற்பவ நாதன், வி,டி.அய் .சகாயராணி, பொருளா ளராக டி.சந்தானம், அமைப்புச் செயலாளராக எஸ்.இளைய பெருமாள் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

கூட்டத்தில் தென் மண்டல தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற் றும் பிற்படுத்தப்பட்டோர்  ஊழி யர் நலச் சங்கங்களின்  பொறுப்பா ளர்கள் கோ.சனார்த்தனன், ஆர்.இ. இராஜூ, ஏ.யோகநாதன், ஆர்.திருக்குமார், டி.இரவி, கோ.சுந்தர மூர்த்தி, சங்கர் , குமார், ஏ.சுந்தரேஷ், கார்குழலி, ஆர்.மணி, நாதன் ஆகி யோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்கள். 

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் வழி நடத்திய பாதையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இனி வரும் காலங்களில் ஒற்றுமை யுடன் செயல்பட்டு போராடுவோம் என்று அனைவரும் உறுதியேற்ற னர். 

தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளினையொட்டி தந்தை பெரியார் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

No comments:

Post a Comment