அரூரில் சிறப்பாக நடத்துவது என பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

அரூரில் சிறப்பாக நடத்துவது என பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

 அக்டோபர் 28 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் 

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்ட எதிர்ப்பு பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம்

அரூர், செப். 7- அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம்  புதன்கிழமை  (4.10.2023) மாலை 6 மணி அளவில் அரூர் சிவராமன் கேஸ் அலுவலகத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கூ.தங்க ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் சா.பூபதி ராஜா வரவேற்புரையாற்றி னர்.

குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய அரசின்மனுதர்ம விஸ்வ கர்மா யோஜனா  சதி திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பய ணம் மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 28-10-2023 ஆம் தேதி மாலை 5 மணி அளவில்  அரூரில் கலந்து கொண்டு பேசுகிறார். 

அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவது குறித்து  கழகப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பழ பிரபு, ஊமை ஜெயராமன், மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி,மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் சா.இராஜேந்திரன்,கழக காப்பா ளர், அ தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை ஆகியோர் வழி காட்டுதல் உரை நிகழ்த்தினர்.

மாவட்ட கழகத் தலைவர் கு.தங்கராஜ் தலைமையில், விழா குழு தலைவராக மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் அரூர் சா. இராஜேந்திரன் செயல்படுவார். வசூல் குழுவில்  ஊமை. ஜெயராமன், பழ.பிரபு,  மாரி. கருணாநிதி, சா. இராஜேந்திரன்,  கு. தங்கராஜ், அ. தமிழ்ச்செல்வன், தீ.சிவாஜி, மு.பிரபாகரன்,  ஆகியோரும் பிரச் சாரக் குழுவில் சா.பூபதிராஜா, த. மு. யாழ்திலீபன், மா.செல்லதுரை, இ.சமரசம், ராமச்சந்திரன் ஆகி யோரும் செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. 

மேனாள்  மாவட்ட அமைப் பாளர்,கோ.தனசேகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர்  வ.நட ராஜன், செயலாளர் கோ.குபேந்தி ரன், இனமுரசு கோபால், கட்டர சம்பட்டி              இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் இ.சமரசம், ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை தெரிவித்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்குபெறும் வகை யில்  வாகன வசதிகள் கீழ்க்கண்ட கிராமங்களில் இருந்து  ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப் பட்டது. 

கடத்தூர், வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், சிந்தல்பாடி, குருபர அள்ளி,,பொம்மிடி, வாசிவாசி கவுண்டனூர், பயர்நத்தம், பாப்பி ரெட்டிப்பட்டி, வேதரம்பட்டி, வேப்பம்பட்டி, கட்டரசம்பட்டி, ஈட்டியம்பட்டி,வேப்பநத்தம், சோரியம்பட்டி, கொலகம்பட்டி, தாசரஅல்லி, அக்ரஹாரம், பறை யப்பட்டி, பாளையம், வீரப்பன் நாயக்கம்பட்டி, மெனசி, மோளை யானூர் ஆகிய இடங்களிலிருந்து வாகன  வசதிகளை ஏற்பாடு செய் வது என முடிவு செய்யப்பட்டது. 

இறுதியாக இ. சமரசம் நன்றி கூறினார்.   

No comments:

Post a Comment