அரியலூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டங்கள் - செந்துறையில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

அரியலூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டங்கள் - செந்துறையில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

 

அரியலூர், மே 29- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.5.2023 அன்று மாலை 5 மணியளவில் அரியலூர் கோபால் அலுவலகத்தில் சிறப் பாக நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் ,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் க. சிந்த னைச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். செந் துறை ஒன்றிய தலைவர் மு.முத் தமிழ்செல்வன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வகுமார், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந் திரன், ஒன்றிய செயலாளர் பி. வெங் கடாசலம், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா. கருணாநிதி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஒட்டக்கோவில் செந்தில், முருகன், மருவாய் சேகர், இரா. குணசேகரன், பொன்பரப்பி சுந்தரவடிவேல், குழுமூர் சுப்பராயன், ஆண்டிமடம் ஒன்றிய இ.அ. தலைவர் வே.செந் தில், விளாங்குடி இளைஞரணி தோழர்கள் மணிகண்டன், விக் னேஷ்குமார், ஆகியோர் பங்கேற்று கருத்துகளை எடுத்து கூறிய பின் னர் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பொதுக்குழு முடி வுகளை விளக்கியும், தெருமுனைக் கூட்டங்கள் ஏராளமாக நடத்தப் பட வேண்டியதன் அவசியம் குறித் தும் பெரியாரிய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்க வேண்டியது குறித்தும் செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஆலோ சனைகள் வழங்கியும் சிறப்புரை யாற்றினார். அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட்டி ணன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஈரோட்டில் நடைபெற்ற கழகப்  பொதுக்குழுவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவதென தீர்மானிக்கப்படுகிறது

திராவிடர் கழகத்தின் அனைத்து நிலை புதிய பொறுப்பாளர்களுக்கும் இந்த கலந்துரையாடல் கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

கழக அமைப்பில் புதிய எழுச் சியை ஏற்படுத்தும் வகையில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சூறா வளியாய் சுழன்றடிக்க வேண்டும் என்றும் பாலின வேறுபாடின்றி புதிய உறுப்பினர்களை ஏராளமாக சேர்த்து கிளைக் கழகம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும், கழகக் கொடி கிளைக்கழகம் தோறும் பறக்க வேண்டும் என்றும் இக்கூட்டம்  வலியுறுத்துகிறது.

செந்துறையில் எதிர்வரும் (25.6.2023) ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் பெரியாரியல் பயிற்சி முகாமில் ஏராளமான இளைஞர்களையும் மாணவர்க ளையும் பங்கேற்க செய்து சிறப்பாக நடத்திடுவதென ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது.

ஆண்டிமடத்தில் நடைபெற்ற தமிழர் தலைவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.

No comments:

Post a Comment