பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்து விடமாட்டார்கள்; வாழ்ந்து காட்டுவார்கள் என்பதற்கு க.கலைமணி - பாக்யா இணையர் ஓர் எடுத்துக்காட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்து விடமாட்டார்கள்; வாழ்ந்து காட்டுவார்கள் என்பதற்கு க.கலைமணி - பாக்யா இணையர் ஓர் எடுத்துக்காட்டு!

'கோ.கருணாநிதி - குணசுந்தரி' இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலிமூலம் பாராட்டுரை

பண்ருட்டி, மே 6 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் திடல் பணித் தோழர் க.கலைமணி - பாக்யா ஆகியோரால் கட்டப்பட்ட கோ.கருணாநிதி-குணசுந்தரி இல்ல அறிமுக விழா 30.4.2023 அன்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இல்லத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார். திராவிடர்  கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் குடிவழிக் கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார். கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு இந்திய சமூகப் புரட்சியாளர்கள் படத்தினை திறந்து வைத்தார். 

நிகழ்வின் தொடக்கமாக கலைமணி வரவேற்புரை ஆற்றினார். அவரது உரையில் தந்தை பெரியாரின் கோட்பாடுகளும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளும் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்பட்டன என்று விளக்கி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுவையிலிருந்து வந்த அனை வரையும் வரவேற்றார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்  நிகழ் வினை ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மதிமுக அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் பொறியாளர் 

மு.செந்திலதிபன், திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிர மணியன், திமுக கம்மாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகன், கழக அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே.செல்வம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தர்மபுரி ஊமை ஜெயராமன், கடலூர் மண்டல தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டலச் செயலாளர் நா.தாமோதரன், மாநில ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கோட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் முத்து.கதிரவன்,   மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி,  கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் வ.தட்சிணமூர்த்தி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

பெரியார் பிஞ்சு க.பா.சித்தார்த் புரட்சிக்கவிஞர் பாடிய ''தொண்டு செய்து பழுத்த பழம்'' பாடலைப் பாடினார்.

இவர்களைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை உரை யாற்றினார்.

அவரது உரையில், முடப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதியில் திராவிடர் கழகத்தின் பணிகளையும்,  கலை மணியின் கொள்கை உறுதியையும் விளக்கினார். 

அவரைத் தொடர்ந்து கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், கலைமணி  இல்ல திறப்பு விழாவை கொள்கைப் பூர்வ மான விழாவாக நடத்துவதற்கு அடையாளமாக இந்திய சமூகநீதிப் புரட்சியாளர்கள் படத்தினை திறந்து வைக்கும் வாய்ப்பை தமக்கு வழங்கியதாகவும், இதன் மூலம் இந்திய சமூகப் புரட்சியாளர்கள் சாகு மகராஜ், புத்தர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பி.பி.மண்டல், வி.பி.சிங் ஆகியோரைப் பற்றி வந்திருக்கும் மக்களுக்கு செய்திகளை கூற வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, இந்திய சமூகப் புரட்சி வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு  கலைமணியின் பணிகளை பட்டியலிட்டார்.

நிறைவாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவரின் வாழ்த்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி மூலம் தமது வாழ்த்துச் செய்தியை தெரிவித்து இருந்தார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது:

''தோழர்கள் க.கலைமணி - பாக்யா ஆகிய இருவரும் பெரியார் கல்வி நிறுவனத்தின் மேனாள் மாணவர்கள். தோழர் கலைமணி தலைமை நிலையத்தில் முக்கிய பணிகளை ஆற்றக் கூடியவர். எந்தப் பணியை அவரிடத்தில் ஒப்படைத்தாலும் அதை பொறுப்போடும், செயல் திறனோடும் செய்து முடிக்கக்கூடியவர். அவரது வாழ்விணையராக இருக்கக்கூடிய தோழியர் பாக்யா நல்ல அளவிற்கு அவரது இயக்கப் பணிக்கு உறு துணையாக இருக்கக்கூடியவர். அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் என்னால் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க இயல வில்லை என்பதற்காக வருந்துகிறேன். ஆனாலும், மாநாடு போல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகப் பொறுப்பாளர்களை, தோழர்களை அழைத்து நடத்துவது மிகச் சிறப்பானது. பொதுவாக நம்முடைய நாட்டில் இரண்டு விதமான அச்சுறுத்தல்களை செய்து இருக்கிறார்கள். "வீட்டை கட்டிப்பார்! கல் யாணத்தை பண்ணி பார்!" என்பார்கள்.

ஆனால், இவர்கள் திருமணத்தையும் எளிமையாக வெற்றிகரமாக செய்து கொண்டு, வீட்டையும் மிகச் சிறப்பாக கட்டி முடித்து விட்டார்கள்.

தந்தை பெரியாரை வாழ்க்கை நெறியாகக் கொண்டால் அவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்வார்கள், வீழ்ந்து விடவோ, தாழ்ந்துவிடவோ மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டானவர்களாக விளங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த பிரச்சார நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. பொதுவாக பார்ப்பனர்களை அழைத்து அவர்கள் கொள் கையை திணிப்பதற்காக இதுபோன்ற விழாக்களைப் பயன்படுத்துவார்கள். பெயரையே 'கிரகப்பிரவேசம்' என்று போடுவார்கள். நாம் ''புதுமனை அறிமுக விழா'' என்று சொல்லுகிறோம். இதுபோல் தூய தமிழில் நம் விழாக்களின் பெயர்கள்கூட இருக்காது. அவற்றை யெல்லாம் மாற்றி அழகு தமிழில் பெயர்களை சூட்டியது தான் நம்முடைய திராவிட இயக்கத்தின் பணி. அந்த கிரகப் பிரவேசத்தில் பார்த்தீர்களானால் பசுமாட்டை மனிதர்களுக்கு முன்பு அழைத்துச் செல்லவேண்டும். அதை சாணி போடவைக்க வேண்டும். அதன் சிறுநீரை குடிக்க வேண்டும் என்பார்கள். அண்மையில் மருத்துவ அறிஞர்கள் கோமியத்தில் உள்ள கிருமிகள் எவ்வளவு பெரிய நோய்களை எல்லாம் உண்டாக்குகின்றன என்று கண்டறிந்து வெளியிட்டுள்ளார்கள். பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, மூடத்தனத்தின் கருத்துகளை பரப்பிட எதையெல்லாம் பயன்படுத் தினார்களோ அதையெல்லாம் போக்கிட தந்தை பெரியார் சமூகத்தில் முற்போக்கான அறிவார்ந்த கருத்துகளைப் பயன்படுத்தினார். இந்த நிகழ்வின் (இல்ல அறிமுக விழாவின்) தத்துவம் என்பது என்ன? இவர் வந்து ரிப்பனைக் கட் பண்ண வேண்டும், அவர் கல்வெட்டைத் திறக்க வேண்டும் என்பதல்ல. புது வீடு கட்டி இருக்கிறோம் அதன் முகவரியை அறிமுகப்படுத்துகிறோம். இது எங்கள் வீடு என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதுதான் இதன் தத்துவம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சமூகத்திற்கு பயன்படுகின்ற பல நல்ல கருத்துகளை பேசுவதற்கான தளமாக நாங்கள் பயன்படுத்துகிறோம். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றியவர்கள் - கடவுள் மறுப்பாளர்கள் -  வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதைக் காட்டுகிறோம்'' என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  சென்னை மண்டல செயலாளர்   தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ வெங்கடேசன், மாநில செயலாளர் மா.அழகிரிசாமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், திராவிடர் கழக தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அலுவலர் கு.இராமலிங்கம், நெய்வேலி வெ.ஞானசேகரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், செயலாளர் அரங்க.பரணிதரன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல், கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, நெய்வேலி நா.பாவேந்தர்விரும்பி,  ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், சேலம் மாவட்டச் செயலாளர் பா.வைரம், இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், வேலூர் மாவட்டத் தலைவர் இர.அன் பரசன், காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாத்திக.பொன்முடி,  விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் த.பகவன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் குடியாத்தம் வி.இ.சிவக்குமார், பூவை செல்வி, பெரம்பூர் க.சுமதி, திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், சோ.சுரேஷ், கடலூர் மாவட்ட வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், சென்னை இ.இசையின்பன், பகலவன், புரசை சு.அன்புச்செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், அம்பத்தூர் மீசை நடராசன், ஆவடி வஜ்ஜிரவேல், 

இ.தமிழ்மணி, க.கார்த்திகேயன், கனிமொழி, மஞ்சுளா செந்தில்குமார், வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,  துரை.அருண், சிறுப்பாக்கம் சு.தமிழ்ச்செல்வன், பொன்ன மராவதி இரா.செல்வம் லதா, வெ.மணிராஜா கிருஷ்ண வேணி, வெ.ஆசைத்தம்பி, மனோகர், மாவலி, அம்சத் கான், கோவை ரம்யா ராஜா, சே.ஜெயபால், திருச்சி வி.எஸ்.கார்த்திகேயன் அஞ்சுகா,  தருமபுரி த.மு.யாழ் திலீபன், சென்னை பண்பொளி, இறைவி, மாட்சி, மணிமேகலை, ப.சீர்த்தி, மு.பவானி, மு.பவித்ரா, முத்து லட்சுமி,தஞ்சை ஜெகதாராணி, திருவெறும்பூர் புனிதா, விருத்தாசலம் உஷா,  குடியாத்தம் தேன்மொழி, ஓசூர் செல்வி, நெய்வேலி இரத்தினசபாபதி, சென்னை நா.பார்த் திபன், த.மரகதமணி, அகில், இந்திரா நகர் டிஜிட்டல் ராமநாதன், வலசை பெரியார் மணி, வடக்குத்து பெரியார் படிப்பகம் கண்ணன், இந்திரா நகர் திராவிடன்,  புதுச்சேரி தி.ராஜா, பழனி, சின்னவடவாடி செ.சிலம்பரசன், இராம ராஜன், மு.ரங்கநாதன், உடுமலை வடிவேல், பொறியாளர் ஈ.குமார், ஜெ.ஆனந்த், ம.சக்திவேல், ஆர்.அருள், கம லேஷ், கே.என்.மகேஷ்வரன், வஜாஹத், பெ.அன்பரசன்,  பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாண வர்கள் சு.விமல்ராஜ். வே.சங்கர், இ.அருண், பிரகாஷ், மாண்போர்டு ரீகன், த.தணிகைவேல், அ.மாணிக்கவேல், ஜி.கே.மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங் கேற்று சிறப்பித்தனர்.

முடப்பள்ளி ஆசிரியர்கள் ச.ஞானவேல் கலைவாணி, வ.தட்சிணாமூர்த்தி விடுதலை சந்தாக்களை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினர்.

நிறைவாக வை.கலையரசன் நன்றி கூறினார்.

பெரியார் பிஞ்சு க.பா.சித்தார்த் புரட்சிக்கவிஞர் பாடிய தொண்டு செய்து பழுத்த பழம் பாடலைப் பாடினார்.


No comments:

Post a Comment