'விடுதலை' பற்றி அடிகளார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

'விடுதலை' பற்றி அடிகளார்

தலைவர் பெரியார் அவர்கள் தான், துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலையைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க, மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல் மட்டத்திற்கும், அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்பொழுதுதான் அவர்கள் கை களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய விடுதலையினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டி லும் இருக்க வேண்டும்.

(விடுதலை பணிமனை (பெரியார் திடல்) திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் - விடுதலை  2.11.1965)


சிறைக் கைதிக்கு இருக்கும் "விடுதலை" படிக்கும் ஆர்வம்!

பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஒருவர் அக்டோபர் 1980-இல் எழுதிய ஒரு மடல்.

"எனது பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரிமுகம்மது எழுதும் விவரம். வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது; அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது. மிகவும் நன்றி.

- பக்கிரிமுகம்மது

சி.என்.ஓ. 2640 மத்திய சிறை, பாளை

குறிப்பு: சிறையிலே உடல் இருந்தாலும் அந்த ஆயுள் கைதியின் சிந்தனை "விடுதலை" படிப்பதில் சிறகடித்துப் பறக்கிறது. இங்கு வெளியிலே உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களில் எத்தனையோ பேர் "விடுதலை" படிக்கும் தன்மையின்றிச் சிந்தனை முடங்கிய சிறையிலே ஆயுளைக் கடத்துகின்றனர்.


No comments:

Post a Comment