எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை,ஏப்.26- எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சிக்கனம் தொடர்பான 'சக் ஷம் 2023' என்ற விழிப்புணர்வு பிரச் சாரத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை இராயப்பேட்டையில் 24.4.2023 அன்று  தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வரும் மே 8ஆம்தேதி வரை ‘நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய ஆற்றல் சேமிப்பு' என்ற கருப்பொருளில் நடத்தப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எண்ணெய் தொழில் துறை ஒருங்கி ணைப்பாளர் வி.சி.அசோகன் வரவேற்புரை ஆற்றினார்.

சாகம் விழிப்புணர்வு பிரச்சா ரத்தைத் தொடங்கி வைத்து தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசிய தாவது: 

ஆரோக்கியமான சூழலையும் நிலைத்த எதிர்காலத்தையும் நமது வருங்கால சந்ததியினருக்கு விட் டுச் செல்ல நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும். ஆற்றல் சிக்க னத்தை வலியுறுத்தும் இந்த விழிப் புணர்வு பரப்புரையில் நாம் ஒவ் வொருவ ரும் பங்களிப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவின் நிகர பூஜ்ஜியம் இலக்கை 2060ஆம் ஆண்டுக்குள் அடைய ஏதுவாக தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கொள்கை களில் ஏராளமான முன் முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்திய அரசு இலக்கு நிர்ணயிப்பதற்கு முன்பாகவே, தமிழ்நாடு அரசு நிகர பூஜ்ஜியம் நிலையை அடைவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டுள் ளது  என்றார்.

இந்நிகழ்ச்சியில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல சில்லறை வர்த்தகத் துறை தலைமை பொது மேலாளர் மற்றும் தலைவர் சஞ்சய் மாத்தூர் சிக்கன உறுதிமொழி ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவ னத்தின் தென் மண்டல மனித வள சேவை தலைவர் சுஷ்மித் தாஸ் நன்றியுரை வழங்கினார்.

விழாவில், இந்தியன் ஆயில் செயல் இயக்குநர் (மண்டல சேவை கள்) மற்றும் தென்மண்டல எண்ணெய் தொழில் துறையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். தனபாண்டியன், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஜான் டி கோஷி, கெய்ல் நிறுவனத்தின் பொது மேலாளர் (பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம்) கே.அசோக், சிபிசிஎல் நிறுவ னத்தின் பொதுமேலாளர் (உற் பத்தி திட்டமிடல்) வி. சிறீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment