பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் ஏற்படாது: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் ஏற்படாது: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

பெங்களூரு, ஏப்.22 கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

கருநாடக சட்டமன்ற தேர்தல் முக்கியமாக உள்ளூர் மற்றும் வளர்ச் சிப் பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி போட்டியிடும். நாங்கள் எங்கள் ஆட்சியில் உள் ளூர் பிரச்சினைகள் மற்றும் வளர்ச் சியை ஏற்படுத்தி உள்ளோம். தேசிய அளவில் மோடி மற்றும் ராகுல்காந்தி இடையே போட்டி நிலவுவதாக மக்கள் கருதுகிறார்கள். இது வகுப்பு வாத மற்றும் மதச்சார்பற்ற அரசி யலுக்கு இடையிலான சண்டை. பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலிலும், மக்களிடமும் எந்த தாக்கமும் ஏற் படாது. ஏனெனில் இது மாநில தேர்தல், இது தேசிய தேர்தல் அல்ல. முக்கிய உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் பா.ஜனதா அரசின் தவறான ஆட்சியை பரிசீலித்து மக்கள் வாக் களிக்க உள்ளனர். கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் முடிவு செய்து விட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையின் மீது நம்பிக்கை இருக்கிறது. மாநிலத்தில் சிறுபான்மையினரின் நலனை காக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு களை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். மற்ற சமுதாயத்தினரும் கண்டிப்பாக காங்கிரசுக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள். அதைத்தான் நான் நம்புகிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment